திருமந்திரம் » எட்டாம் தந்திரம் » அறிவுதயம் » பா_எண்: 2355
தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை! தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்! தன்னை அறியும் அறிவை அறிந்தபின்! தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே!!
‣திரண்டகருத்து :
தன்னுடைய உண்மைநிலை அதாவது நானே சிவத்தின் சொரூபம் என்று புரிந்துக்கொண்டு ஒழுக்கமாக நடப்பவனுக்கு எந்த ஒரு கேடும் வருவதில்லை! அந்த உண்மைநிலையை அறியாததால் தான் அவன் கெடுகின்றான்!! அந்த உண்மைநிலையை (நானே சிவசக்திசொரூபம் என்ற) புரியும் அறிவு வந்தால் அவன் தன்னையே பூஜை செய்து அர்ச்சித்தி வணங்குவானே!!