அன்புடையீர்! வம்மின் இங்கே!❤

#NNA - Naan Naani Alla

வாங்க வாங்க! நம் உண்மைத் தமிழ் மெஞ்ஞான
வழியில் பயணிப்போம் வாங்க!

அரிய மெஞ்ஞான கருத்துக்கள் எளிய புரிதலில்
விளக்கும் ஒரே தளம்!

Stay Connected :

More to Come!

மிக அடிப்படையாக அறிந்துகொள்ள வேண்டியவை :

Our exclusive Contents

Entire Secret Wisdom is Compressed into every single Video!

FAQ

Most frequent questions and answers

உலகவர்கள் அனைவரும் சாதி மத பேதம் கடந்து ஒற்றுமையாக ஒருமித்து வாழ்ந்து பேரின்ப பெருவாழ்வை அடைவதே சுத்த சன்மார்க்கம்.

அமுதப் பொழுதாகிய அதிகாலை 4 மணிக்கு எழுந்து அருளாளர்களின் பாடல்களைப் படித்து உணர்ந்து ஊன்றி விசாரித்து நன்முயற்சியில் பழகும் ஆன்மாக்களே NNA 4am Soul.

நாம் பயணிப்பது சுத்த சன்மார்க்க பாதை என்பதால் இங்கு குரு, தீட்சை மற்றும் இதர சடங்கு சம்பிரதாயங்கள் அவசியம் அன்று.

அன்பு = சிவம் ஆகையால் நாம் அனுதினமும் அன்பை (சிவத்தை) வளர்த்துக்கொள்ள வேண்டும் அதுவே ஆன்ம வளர்ச்சி!

அது தான் நம்மை சிவானுபவத்திற்கு இட்டுச்செல்லும்!

அன்பின் வழியது உயிர்நிலை
~திருவள்ளுவர்

அன்பே சிவமாவது யாரும் அறிகிலார் ~திருமூலர் அன்பெனும் அணுவுள் ளமைந்தபேர் ஒளியே அன்புரு வாம்பர சிவமே ~ வள்ளலார்

சிவம் என்பது ஒரு கருணையான அறிவின் நிலை அந்த நிலையை அடைந்தவர் யாரோ அவரே சிவன். அந்த நிலையை யார் அடைகிறார்களோ அவரை சிவன் என்று அழைப்பர் ஆகையால் இந்த ஜீவனால் சிவனாக முடியும்.

ஜீவன் என சிவன் என்ன வேறில்லை

ஜீவனார் சிவனாரை அறிகிலர்

ஜீவனார் சிவனாரை அறிந்தபின்

ஜீவனார் சிவனாயிட்டு இருப்பரே

பிற உயிர்களை தம்முயிர் போல் எண்ணி அவ் உயிர்களுக்கு நேரும் இடையூறுகளை நீக்குவதே ஜீவகாருண்யம்.

“உயிர் கொலையும் , புலை பொசிப்பும் உடையவர்கள் உறவினத்தார் அல்லர் !! அவர்கள் புற இனத்தார் “ — வள்ளலார்

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்

எங்ஙனம் ஆளும் அருள்.” — திருவள்ளுவர்

நம்மைப் போலவே ஊன், தசை, நரம்பு மண்டலம், வலியுணர்தல் ஆகிய பண்புகள் கொண்டு வாழும் விலங்குகளை துடிக்கக் கொன்று அதன் உடலை புசிப்பது முழுக்க முழுக்க கடவுள் விரோதமான செயல். ஆகையால் கொலை புலை மறுத்தலே சுத்த சன்மார்க்கத்தின் முதற்படி.

இல்லை, சுத்த சன்மார்க்கத்தில் மரணம் என்பது செயற்கை. எப்பொழுது ஒரு மனிதன் தான் இறக்கப் போகிறேன் என்று நம்புகின்றானோ அப்பொழுதே அவனுள் இறப்பு வேலை செய்ய தொடங்குகிறது அது என்றோ ஒரு நாள் முழுமை பெறுகிறது.

மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்

புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்

பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.” — வள்ளலார்