அன்புடையீர்! வம்மின் இங்கே!❤

மயங்குகின்றார்களே!!

⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜

திருமந்திரம் » எட்டாம் தந்திரம் » சுத்தாசுத்தம் » பா_எண்: 2556

பொருளதுவாய் நின்ற புண்ணியன் எந்தை
அருளது போற்றும் அடியவர் அன்றிச்
சுருளதுவாய் நின்ற துன்பச் சுழியில்
மருளதுவாய்ச் சிந்தை மயங்குகின்றாரே!.

‣மருள் – மாயை | பொருள் – மெய்ப்பொருள் | சிந்தை – சித்தம்.

‣திரண்டகருத்து :

மெய் பொருளாய் நிற்கும் புண்ணியனான எனது தந்தை (சிவம்) அருளினை அடியவர்கள் (மெய்யன்பர்கள்) போற்றி வணங்குகிறார்கள்!! (மறவாத இறை சிந்தனை) மற்றவர்கள் மருளாகி நின்ற மாயை சிந்தையில் மயங்கி, துன்பச் சுழியில் பட்டு சுருங்குகிறார்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *