அன்புடையீர்! வம்மின் இங்கே!❤

பெருநெறி படிகள்

PATH TO
IMMORTAl LIFE

பெருநெறி வாழ்வின் படிகள்

நாம் பெறும் புருஷார்த்தம் நான்கு! அவையாவன
#01. சாகாக்கல்வி
#02. ஏமசித்தி 
#03. தத்துவ நிக்கிரகம் 
#04. கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் 

சாகாக்கல்வி

  • மாயை கலப்பு உடையவர்கள் (Matrix Minded /Materialistic Persons)
    எழுதிய உலக நூல்களை படிக்காதிருத்தல்!
  • வேதங்கள்இதிகாசங்கள், புராணங்களை அப்படியே ஏற்காமல்!
    அதற்கு பின்னால் உள்ள இரகசியங்களை ஆராய்தல்!
  • சாகாக்கல்வியை கூறும் அருளாளர்கள் (Higher Souls) அருளிய
    மெய்ஞ்ஞான நூல்களை
    ஊன்றி படித்தல்! பிறகு அதன்படி நிற்றல்!
  • அவையாவன : திருவருட்பா, திருமந்திரம், திருக்குறள், திருவாசகம்

ஏமசித்தி

  • ஏமம் என்றால் தங்கம் (உறுதியாக்குதல்)
    (தங்கம் உறுதியான உலோகம்)
  • நினைத்தது நினைத்தப்படி செய்து முடித்தால் அதற்கு பெயர் சித்தி (எ:கா)
    “காரியம் சித்தியாயிற்று என்று கூறுவது வழக்கம்!”
  • ஏமசித்தி என்றால் பொன் செய்யும் வித்தை! அதாவது எந்த ஒரு
    பொருளை கொடுத்தாலும் அந்த பொருளை அழியாது உறுதியாக்குதல் ஆகும்!
  • அதுபோல நம் உடம்பையும்
    ஏம சித்தி (அழியாத உறுதிப் பொருள்) ஆக்க வேண்டும்
    என்று வள்ளலார் கூறுகிறார்!
  • அந்த உறுதியான சுத்ததேகத்தை பரோபகாரம்சத்விச்சாரம்  மூலமே பெற வேண்டும்!
    வேறு வழியில் கூடாது என்றும் கூறுகிறார்!
    (யோகம், தவம், மூலிகை, மணி, மந்திரம், ஔஷதி மூலம் அல்ல)
  • அருட்பெருஞ்ஜோதி மகாமந்திர தொடர் நாம ஜபம் இதுக்கு உதவும்!

தத்துவ நிக்கிரகம்

  • தத்துவங்கள் என்றால் அது 36 தத்துவங்களை குறிக்கும்!
    அதனை விரிக்கில் 96 தத்துவங்கள் ஆகும்!
  •  நிக்கிரகம் என்றால் ஒழுங்கு செய்து நிற்க செய்தல்!
    எப்படி கிரகங்கள் (Planets) எல்லாம் ஒரு ஒழுங்கில்
    நின்று செயல்படுகிறதோ அப்படி!
  • இந்த தத்துவங்களின் செயற்பாடுகளை எல்லாம் நாம்
    அறிந்து, ஆராய்ந்து, அடக்கி ஆட்படுத்தல் வேண்டும்!
  • இப்போது நமது தத்துவங்கள் எல்லாம் அதனதன் போக்கில் உள்ளது!
    அதனை நமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, ஒழுங்கு செய்து
    சத்துவமய மாக்க வேண்டும்! அதுவே தத்துவ நிக்கிரம் ஆகும்

கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல்

  • முடிவான ஆண்டவர் ஒருவரே உண்டு!
    அவர் யார்? என்று அறிதல் வேண்டும்!
  • அவரின் தன்மை என்ன என்று அறிந்து நாமும் அவர் போல ஆக வேண்டும்!
  • எல்லா வல்ல அந்த ஏக இறைவன் பிறப்பு, இறப்பு என்னும் சுழற்சியில் சிக்குவது இல்லை!
  • அவர் அறிவு சொரூபமாக, தயவு வடிவமாக இருப்பதாலேயே
    அவருக்கு எந்த துன்பமும் வருவது இல்லை!
  • அந்த விதியை அறிந்து நாமும் அவரை போல மாறுவதே!
    நம்முடைய கடைசி புருஷார்த்தம் ஆகும்!
  • பிறப்பு, இறப்பு என்னும் இந்த துன்பச் சுழற்சியில் இருந்து முழுமையாக தப்பிக்க இது மட்டுமே ஒரே வழி!
    வேறு உபாயம் இல்லை!
இந்த நான்கு புருஷார்த்தங்களை பெற உதவும் ஒழுக்கங்கள்
பற்றி அறிய இங்கே 👉🏻 கிளிக் செய்யவும் 👈🏻

⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜