அன்புடையீர்! வம்மின் இங்கே!❤

பெருநெறி ஒழுக்கங்கள் – II

PATH TO
IMMORTAL LIFE - ii

பெருநெறி ஒழுக்கங்கள்

நாம் பெறும் 
புருஷார்த்தம் நான்கு!
அவையாவன:
#01. 
ஏமசித்தி
#02. சாகாக்கல்வி 
#03. தத்துவ நிக்கிரகம் 
#04. கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் 
அந்த நான்கு புருஷார்த்தங்களை பெற உதவும் ஒழுக்கங்கள்:
1.இந்திரிய ஒழுக்கம்
2. கரண ஒழுக்கம்
3. ஜீவ ஒழுக்கம்
4.ஆன்ம ஒழுக்கம்

இந்திரிய ஒழுக்கம்

  • கொடிய சொல் செவி புகாது 👂🏻💬, நாதம் முதலிய ஸ்தோத்திரங்களைக் அதிசயாது உற்றுக் கேட்டல்! 🎙️✔️
  • அசுத்த பரிசமில்லாது, தயாவண்ணமாகப் பரிசித்தல்! 🤗✔️
  • குரூரமாகப் பாராதிருத்தல்! 😠
  • உருசி விரும்பாதிருத்தல்! 😋
  • சுகந்தம் விரும்பாதிருத்தல்! 😶
  • இன்சொல்லாடல்! 😇✔️
  • பொய் சொல்லாதிருத்தல்!😷
  • ஜீவஹிம்சை🔪 நேரிடும் காலத்தில் எவ்விதத் தந்திரத்தினால் ஆவது தடை செய்தல்!🙏🏻
  • பெரியோர்கள் எழுந்தருளியிருக்கும் இடங்களுக்குச் செல்லுதல்;🛕⛪🕍🏯
  • ஜீவ உபகார நிமித்தமாய் சாதுக்கள் வாசஸ்தலங்களிலும், திவ்ய திருப்பதிகளிலும் சஞ்சரித்தல்,
  • நன்முயற்சியில் கொடுத்தல் எடுத்தலாதி செய்தல்!🤝💴💳
  • மித (நடுநிலையான) ஆகாரம் செய்தல்!🍽️
  • மித (நடுநிலையான) போகம் செய்தல்!🕺🏻
  • மலஜல🚽 உபாதிகளை🤒🤢🤮 அக்கிரமம் (Intensively),
    அதிக்கிரமம் (More 
    Intensively) இன்றிக் கிரமத்தில் நிற்க செய்வித்தல்!
  • கால பேதத்தாலும் உஷ்ண ஆபாசத்தாலும் தடை நேர்ந்தால், ஓஷதி வகைகளாலும்,
    பௌதிக மூலங்களாலும், சரபேத, அஸ்தபரிச தந்திரத்தாலும், மூலாங்கப் பிரணாவத்
    தியான சங்கற்பத்தாலும் தடை தவிர்த்துக் கொள்ளல்! 🧘🏻
  • மந்ததரம் (Beginner Level: சுக்கிலத்தை அக்கிரம அதிக்கிரமத்தில் விடாது நிற்றல்!
  • தீவிரதரம் (Master Level: எவ்வகையிலும் சுக்கிலம் வெளிப்படாமல் நிறுத்தல்!
  • இடைவிடாது கோசத்தைக் கவசத்தால் மறைத்தல்! 🕴🏻
  • இதுபோல் உச்சி, மார்பு முதலிய அங்கங்களையும் மறைத்தல்!🙆🏻‍♂️
  • சஞ்சரிக்கும் 👣 காலத்தில் காலில் கவசம் தரித்தல்! 🩴
  • அழுக்காடை👕 உடுத்தாதிருத்தல்❌ முதலியன இந்திரிய ஒழுக்கமாம்!

கரண ஒழுக்கம்

  1. மனத்தைச் சிற்சபை இடத்தே நிறுத்தல்; முதலில் புருவ மத்தியில் நிற்கச் செய்தல்!
  2. தூர்விஷயத்தைப் (Dark Contents🫣) பற்றாது இருக்கச் செய்தல்! 🤮
  3. பிறர்குற்றம் விசாரியாது இருத்தல்!
    🗣️🙊
  4. பிறர் மீது கோபியாதிருத்தல்!😠
  5. தன்னை மதியாதிருத்தல்!😤
  6. இராகாதி நீக்கி இயற்கைச் சத்துவ மயமாதல், 😇✔️
  7. தனது தத்துவங்களை👁️👂🏻👅👃🏻🤚🏻🦵🏻 அக்கிரமத்தில் (Intensive) செல்லாது கண்டித்தல் முதலியன கரண ஒழுக்கமாம்.

ஜீவ ஒழுக்கம்

  • ஆண்மக்கள்🚹 – பெண்மக்கள் 🚺முதலிய யாவர்களிடத்திலும்,
    ஜாதி❌
    சமயம்❌
    மதம்❌
    ஆசிரமம்❌
    சூத்திரம்❌
    கோத்திரம்❌
    குலம்❌
    சாஸ்திர சம்பந்தம்❌
    தேசமார்க்கம்❌
    உயர்ந்தோர்❌
    தாழ்ந்தோர்❌
    என்னும் பேதம் நீங்கி
    எல்லவரும் தம்மவர்களாய்ச் சமத்தில் கொள்ளுவது ஜீவ ஒழுக்கமாம்

ஆன்ம ஒழுக்கம்

  • யானை 🐘 முதல் எறும்பு🐜 வரை தோன்றிய எல்லா சரீரங்களில் உள்ள ஆன்மாவே திருச்சபையாகவும்⛪, அதன், 
    உள் ஒளியே🔥 பதியாகவும்,🛐 யாதும் நீக்கமறக் கண்டு, எவ்விடத்தும் பேதமற்று எல்லாம் தானாக நிற்றல்🤗
    ஆன்ம ஒழுக்கமாம்
    .

  • இவ்வண்ணம் நின்றால் மேற்குறித்த அரும்புருஷார்த்தம் கைகூடும்!😇✔️

  • ஒருமை❤️‍🔥 என்பது : தனது அறிவு ஒழுக்கம் ஒத்த இடத்தில், தானே கூடும்; மற்ற இடத்தில்,
    தன்னால் இதரர்களுக்கு இம்சை இல்லாது அவர்கள் செய்யினும் தான் சகித்து அடங்கி நிற்பது.😑🙏🏻

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜