DISCIPLINES FOR SPIRITUAL PEOPLES
- மனத்தால் செய்யும் குற்றங்கள் :
- மனத்தாலும் வெறுப்பு, கொலை, கோபம், சோம்பல், பொய்மை, பொறாமை,
முதலிய குற்றங்களை செய்யாது தவிர்த்தல் வேண்டும்! - பெருந்துயர், பெருநினைப்பு (Overthinking) செய்யாதிருத்தல்!
- மாயை விடயங்களை மெய்மறந்து பார்த்தல்/கேட்டல் ஆகாது!
- பிறர் குற்றம் விசாரித்தல் கூடாது!
- பயம், அகங்காரம், டம்பம், பேராசை, உலோபம், கோபம்,மோகம்,மதம்
இவை முதலிய கரண குற்றங்கள் அடையாத இருத்தல் வேண்டும்!
- உடலால் செய்யும் குற்றங்கள் :
- உரத்து பேசுதல்/இசை பாடுதல்,
- வேகமாக நடத்தல்,
- ஓடி நடத்தல்,
- வழக்கிடல், கடுஞ்சொல் பயன்படுத்துதல், சண்டையிடல் கூடாது.
- துர்கந்த – நற்கந்த (smell) முகர்தல் கூடாது!
- பெருஞ்சிரிப்பு (Unconscious Laughing) செய்தல்,
- அதிக சுவை விரும்பல், அதிக உணவு உண்ணல், பெருந்தூக்கம், வீண் சொல்,
தேவையில்லாத விஷயங்களில் பெருமுயற்சி செய்தல், - மலம் மடக்கல், ஜலம் அடக்கல், தாகம் அடக்கல், சயனவுணர்ச்சி போன்றவைகள்
உடலால் செய்யப்படும் குற்றங்கள் ஆகும் - பொய் சொல்லாதிருத்தல்!
- சதாகாலமும் புருவமத்தியில் ஆண்டவரை நினைத்து மகாமந்திரம் கூறுதல்!
- பயம் பூஜ்ஜியமாக்க முயற்சி செய்தல் வேண்டும்!
- எப்போதும் மனம் உற்சாகத்துடன் இருக்க செய்தல்!
- பெருங்குணம் பற்றல்!
- தெய்வம் பாராய்தல்!
- உயிருக்கு இறங்கல்!
- பிரம்மச்சரியம் கடைப்பிடித்தல்!
- ஆண்டவரை எண்ணி பாடிப்பணிதல்,
- எந்த விதத்திலும் பிராணவாயு அதிகமாக செலவாகாமல் ஜாக்கிரதை உடன் செயலாற்ற வேண்டும்!
- சத்விச்சாரம் செய்தல் மற்றும் கேட்டல்!!
⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜