PATH TO
IMMORTAl LIFE
பெருநெறி வாழ்வின் படிகள்
நாம் பெறும் புருஷார்த்தம் நான்கு! அவையாவன
#01. சாகாக்கல்வி
#02. ஏமசித்தி
#03. தத்துவ நிக்கிரகம்
#04. கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல்
சாகாக்கல்வி
- மாயை கலப்பு உடையவர்கள் (Matrix Minded /Materialistic Persons)
எழுதிய உலக நூல்களை படிக்காதிருத்தல்! - வேதங்கள், இதிகாசங்கள், புராணங்களை அப்படியே ஏற்காமல்!
அதற்கு பின்னால் உள்ள இரகசியங்களை ஆராய்தல்! - சாகாக்கல்வியை கூறும் அருளாளர்கள் (Higher Souls) அருளிய
மெய்ஞ்ஞான நூல்களை
ஊன்றி படித்தல்! பிறகு அதன்படி நிற்றல்! - அவையாவன : திருவருட்பா, திருமந்திரம், திருக்குறள், திருவாசகம்
ஏமசித்தி
- ஏமம் என்றால் தங்கம் (உறுதியாக்குதல்)
(தங்கம் உறுதியான உலோகம்) - நினைத்தது நினைத்தப்படி செய்து முடித்தால் அதற்கு பெயர் சித்தி (எ:கா)
“காரியம் சித்தியாயிற்று என்று கூறுவது வழக்கம்!” - ஏமசித்தி என்றால் பொன் செய்யும் வித்தை! அதாவது எந்த ஒரு
பொருளை கொடுத்தாலும் அந்த பொருளை அழியாது உறுதியாக்குதல் ஆகும்! - அதுபோல நம் உடம்பையும்
ஏம சித்தி (அழியாத உறுதிப் பொருள்) ஆக்க வேண்டும் என்று வள்ளலார் கூறுகிறார்! - அந்த உறுதியான சுத்ததேகத்தை பரோபகாரம், சத்விச்சாரம் மூலமே பெற வேண்டும்!
வேறு வழியில் கூடாது என்றும் கூறுகிறார்!
(யோகம், தவம், மூலிகை, மணி, மந்திரம், ஔஷதி மூலம் அல்ல) - அருட்பெருஞ்ஜோதி மகாமந்திர தொடர் நாம ஜபம் இதுக்கு உதவும்!
தத்துவ நிக்கிரகம்
- தத்துவங்கள் என்றால் அது 36 தத்துவங்களை குறிக்கும்!
அதனை விரிக்கில் 96 தத்துவங்கள் ஆகும்! - நிக்கிரகம் என்றால் ஒழுங்கு செய்து நிற்க செய்தல்!
எப்படி கிரகங்கள் (Planets) எல்லாம் ஒரு ஒழுங்கில்
நின்று செயல்படுகிறதோ அப்படி! - இந்த தத்துவங்களின் செயற்பாடுகளை எல்லாம் நாம்
அறிந்து, ஆராய்ந்து, அடக்கி ஆட்படுத்தல் வேண்டும்! - இப்போது நமது தத்துவங்கள் எல்லாம் அதனதன் போக்கில் உள்ளது!
அதனை நமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, ஒழுங்கு செய்து
சத்துவமய மாக்க வேண்டும்! அதுவே தத்துவ நிக்கிரம் ஆகும்
கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல்
- முடிவான ஆண்டவர் ஒருவரே உண்டு!
அவர் யார்? என்று அறிதல் வேண்டும்! - அவரின் தன்மை என்ன என்று அறிந்து நாமும் அவர் போல ஆக வேண்டும்!
- எல்லா வல்ல அந்த ஏக இறைவன் பிறப்பு, இறப்பு என்னும் சுழற்சியில் சிக்குவது இல்லை!
- அவர் அறிவு சொரூபமாக, தயவு வடிவமாக இருப்பதாலேயே
அவருக்கு எந்த துன்பமும் வருவது இல்லை! - அந்த விதியை அறிந்து நாமும் அவரை போல மாறுவதே!
நம்முடைய கடைசி புருஷார்த்தம் ஆகும்! - பிறப்பு, இறப்பு என்னும் இந்த துன்பச் சுழற்சியில் இருந்து முழுமையாக தப்பிக்க இது மட்டுமே ஒரே வழி!
வேறு உபாயம் இல்லை!
இந்த நான்கு புருஷார்த்தங்களை பெற உதவும் ஒழுக்கங்கள்
பற்றி அறிய இங்கே 👉🏻 கிளிக் செய்யவும் 👈🏻
⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜