திருவருட்பா » ஆறாம் திருமுறை » மெய்யருள் வியப்பு » பா_எண் : 4992
அறிவிலேன் செய் குற்றம் அனைத்தும் பொறுத்த தன்றியே!
அமுதும் அளித்தாய்!
யார் செய்வார்கள்?
இந்த நன்றியே!
செறிவிலாத பொறியும், மனமும் செறிந்து நிற்கவே செய்தாய்!
மேலும், தெரித்தாய் சாகாக் கல்வி கற்கவே! எனக்கும் உனக்கும்..
▸அறிவிலேன் – அறிவில்லாதவன்
‣திரண்டகருத்து :
அறிவில்லாத நான் செய்த அனைத்து குற்றங்களையும் பொறுத்தது மட்டுமில்லாமல் அருளமுதம் அளித்தாய்!!
யார் செய்வார்கள்? இப்படிப்பட்ட நன்றியை!! பக்குவமில்லாத என் ஐம்பொறிகளையும், மனதையும் பக்குவப்படுத்தி நன்னெறியில் நிற்க செய்தாய்! மேலும், யாருக்கும் அவ்வளவு எளிதில் அறியாத சாகாக்கல்வியை கற்கவைகின்றாய் உனக்கும் எனக்கும் எப்படிப்பட்ட உறவு!!