அன்புடையீர்! வம்மின் இங்கே!❤

என் பாட்டிற்கு இசைந்தான்! 🎶

⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜

திருவருட்பா » ஆறாம் திருமுறை » அடிமைப் பேறு »  பா_எண் : 4699

இசைந்தான்!
என் உள்ளத்து இருந்தான்!
எனையும் நசைந்தான்!
என் பாட்டை நயந்தான்!
அசைந்தாடு மாயை
மனம் அடக்கி வைத்தான்!
அருள் எனும் என் தாயை
மகிழ் அம்பலவன் தான்!!

 ※நசைதல் – விரும்புதல் ; அன்புசெய்தல்
நயத்தல் – இணங்கிப்போதல்; மகிழ்தல் 
 

‣திரண்டகருத்து :
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்
என்னை புரிந்து கொண்டு, இசைந்து வந்து என் உள்ளது இருந்தார்! என்னையும் விரும்பினார்! என் பாட்டை பிரியப்பட்டு கேட்டார்! அசைந்தாடும் மாயை மனத்தை அடக்கி வைத்தார்!!
அருள் (ஆன்மா) என்னும் என் தாய் (அருட்சக்தி) மகிழ்வடைய இவை அனைத்தையும் செய்தவர் என் அம்பலவானரே தான்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *