ஆன்ம பயணத்தில் செய்யும் தவறு!
ஆன்ம பாதையில் பெரும்பாலானோர் செய்யும் தவறு என்னவென்றால் ஆகம வழியில் நில்லாது வேத வழியை செல்லுதல்!
ஆகமம் என்பது ஆன்மலாபம் அடைய இறைவனால் வகுக்கப்பெற்ற ஒழுக்கநெறி சட்டத்திட்டங்கள் ஆகும்!
ஆகமம் இறையால் ஆன்ம அறிவுக் கொண்டவர்களால் எழுத்தப்பட்டது ஆகும்
(ஆன்ம தர நூல்கள் அனைத்துமே ஆகமம் நூல்கள் ஆகும்! எ:கா: திருக்குறள், திருமந்திரம், திருவருட்பா, திருவாசகம்)வேதம் இடைப்பட்ட ஜீவ அறிவுக் கொண்டவர்களால் எழுத்தப்பட்டது ஆகும்!
(அதனால் தான் சில வேதங்கள்
(Not All Vedas) முரண்பாடகவும் உள்ளது!
எ_கா: வர்ணாசிரம தர்மம், ஆண்-பெண் உயர்வு தாழ்வு)
ஆகமத்தின் இறுதி – துவைத அனுபவம் (Duality) இருமைநிலை
வேதத்தின் இறுதி – அத்துவைத அனுபவம் (Oneness) ஒருமைநிலை
அத்துவிதங்கள் இல்லாத நிலை – அத்துவைத நிலை (Non-Duality)ஆன்மலாபம் அடைய செல்லுபவர்கள் முதலில் ஆகமவழியில் சென்று கூறுப்பட்ட ஒழுக்கநெறிகளை (இயமம், நியமம்) கடைப்பிடித்த பிறகே வேதவழி செல்ல வேண்டும்
ஆனால் இப்போது பெரும்பாலானோர் ஆகமம் கூறும் எந்தவித ஒழுக்கநெறிகளை பின்பற்றாமல் நேரடியாக வேதவழி சென்றதால் தான் வேதமும் கெட்டது அதைப் பின்பற்றுபவர்களும் முடிவான நிலையை அடையாமல் கெடுகின்றனர்!
“அகம் பிரம்மாஸ்மி” என்று உணர்ந்தார்களே தவிர உடல் மாற்றம் அடையாமல் இறந்தவர்கள்
பலர் அதற்கு காரணம் இதுவே!ஆன்மலாபம் அடைய பெருநெறி ஒழுக்கம் மிக முக்கியம்!
வள்ளலாரின் உரைநடைப்பகுதி
மேலும் அறிய :
⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜