திருமந்திரம் : ஏழாம் தந்திரம் |
சிவலிங்கம் | பா_எண் – #1773
குரைக்கின்ற வாரிக் குவலய நீரும்
பரக்கின்ற காற்றுப் பயில்கின்ற தீயும்
நிரைக்கின்றவாறு இவை நீண்டு அகன்றானை
வரைத்து வலம் செய்யுமாறு அறியேனே!
குரைக்கின்ற – ஒலி எழுப்புகின்ற
குவலயம் – உலகம்
நீண்டு அகன்ற – வானம்
———-
திருமந்திரம் : ஏழாம் தந்திரம் |
சிவலிங்கம் | பா_எண் – #1774
வரைத்து வலம் செய்யுமாறு இங்கு ஒன்று உண்டு
நிரைத்து வருகங்கை நீர்மலர் ஏந்தி
உரைத்து அவன் நாமம் உணர வல்லார்க்குப்
புரைத்து எங்கும் போகான் புரிசடையோனே!
புரைத்து – மறைந்து போதல்
[sharethis-reaction-buttons]