அன்புடையீர்! வம்மின் இங்கே!❤

Lockdown சொல்லும் பாடம்!

⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜

திருமந்திரம் : ஏழாம் தந்திரம் |
கேடு கண்டிரங்கல் | பா_எண் – #2084

போது சடக்கெனப் போகின்றது கண்டும் வாது செய்து என்னோ மனிதர் பெறுவது நீதியுளே நின்று நின்மலன் தாள் பணிந்து ஆதியை அன்பில் அறியகில்லார்களே

வாது – வாக்குவாதம், சூழ்ச்சி
நின்மலன் – ஆணவமலம் அற்றவன்
ஆதி – ஆதிகாலம் முதல் இருப்பவனாகிய இறைவன்

 ———-
2.யாக்கை நிலையாமை | 144

பண்டம் பெய் கூரை பழகி விழுந்தக்கால் உண்ட அப்பெண்டிரும் மக்களும் பின்செலார் கொண்ட விரதமும் ஞானமும் அல்லது மண்டி அவருடன் வழி நடவாதே

பண்டம் – பொருட்கள் (material things)
பெய் – நிலம் கூரை – வீடு
பழகி – நண்பர்கள், உறவினர்
பெண்டிர் – மனைவி
விரதம் – ஒழுக்கம்
மண்டி – பணிந்து

———————— 

2.யாக்கை நிலையாமை | 145

ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப் பேரினை நீக்கி பிணம் என்று பேரிட்டுச் சூரையம் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு நீரினில் மூழ்கி நினைப் பொழிந்தார்களே

——————————

[sharethis-reaction-buttons]