திருவருட்பா » ஆறாம் திருமுறை » மெய்யருள் வியப்பு » பா_எண் : 4996
வள்ளால் உன்னைப் பாடப்
பாட வாய் மணக்குதே!
வஞ்ச வினைகள் எனை
விட்டோடித் தலை வணக்குதே!
எள்ளாது உனது புகழைக்
கேட்கச் செவி நயக்குதே!
எந்தாய் தயவை எண்ணும்
தோறும் உளம் வியக்குதே.!
※வஞ்சவினை– வஞ்சகம் செய்யும் தீவினைகள்
※எள்ளல் – இகழ்ச்சி
※ நயத்தல் – விரும்புதல்
※ எந்தாய் – என்னுடைய தாய்
※எண்ணுதல் – நினைத்தல்
‣திரண்டகருத்து :
வள்ளலே! உன்னை பாடப் பாட வாய் மணக்குதே! என்னை வஞ்சிக்கும் வினைகள் எல்லாம் என்னை விட்டு ஓடியோய் எனக்கு தலைவணங்கி நிற்கிறதே! இகழில்லாத உனது புகழைக் கேட்கச் செவி விரும்புகிறதே! (தினமும் நான் செய்யும் தவறுகளை பொறுத்துக் கொண்டு மன்னிக்கும்) எந்தாய் (அருட்சக்தி) தயவை நினைக்கும் பொழுது எல்லாம் உள்ளம் வியக்குதே!!