திருவருட்பா » ஆறாம் திருமுறை » பிரிவாற்றாமை » பா_எண் : 3623
வெறுக்க மாட்டேன்!
நின்றனையே விரும்பிப் பிடித்தேன்!
துயர்சிறிதும் பொறுக்க மாட்டேன்!
உலகவர் போல் பொய்யில் கிடந்து புரண்டு, இனிநான் சிறுக்க (குறுக) மாட்டேன்!
அரசே! நின் திருத்தாள் ஆணை!
நின்ஆணை மறுக்க மாட்டேன்!!
வழங்குவன எல்லாம் வழங்கி வாழியவே!
(வழங்க வேண்டிய எல்லாவற்றையும்
வழங்கி என்னை வாழ வைக்க இறைவா!)