அன்புடையீர்! வம்மின் இங்கே!❤

பிரபஞ்ச விதிமுறைகள்

  • முன்னுரை

    • இந்த பிரபஞ்சத்தில் வாழும் நாம் அவசியம் இந்த பிரபஞ்சத்தைப் பற்றியும் அதன் இயங்கும் தன்மை பற்றியும், அதன் விதிமுறைகள் பற்றியும் கட்டாயம் அறிந்திருத்தல் அவசியம் ஆகும்
    • அதனைத் தான் வள்ளலாரும் அண்ட விசாரணை செய்யுங்கள் என்றும் குறிப்பிட்டு உள்ளார்

    Principle of Mentalism

    • எல்லாமே நம் மனது தான், நம் மனது தான் இந்த பிரபஞ்சமே!
    • இந்த பிரபஞ்சம் முழுவதும் இறைவன் என்றாலும், இந்த பிரபஞ்சத்தில் வெளிப்பட்டு உள்ள எல்லா வஸ்துக்களும் யாரோ ஒருவரின் ஒரு நோக்கப்பட்ட மனத்தில் இருந்து உருவானதே ஆகும். 
    • நம் கரணமே (மனது) எல்லா கூறுக்கும் முக்கிய காரணம் ஆகும் அதே சமயம் அதற்கு உள்ள கற்பனைத் திறன் அதற்கு உண்டான வலிமை ஆகும்
    • நம் எண்ணத்தையும், நம்பிக்கையும் பொறுத்தே நம் புறச்சூழல் வடிவமைக்கப்படுகிறது

    Principle of Correspondence

    • அண்டத்தில் உள்ளது அனைத்தும் பிண்டத்திலும் உண்டு!
    • எல்லா அணுவத்துவ உருவிற்கும் (Micro Form) ஒரு மகத்துவ உருவும் (Macro Form) உண்டும்
    • பிரபஞ்சத்தில் நிகழும் எல்லா விஷயங்களும் எல்லா பரிமாணத்திலும், எல்லா நிலைகளிலும் ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்டதே ஆகும்
    • நம் புற உலகானது நம் அக உலகத்தை (மனது) பிம்பப்படுத்துகிறது
       ”The outer world mirrors the inner world
    • எல்லாமே இங்கு ஒன்றோடுடன் ஒன்று பிணைக்கப்பட்டது மற்றும் தொடர்புடையது (Directly or Indirectly) ஆகும்
    • நம்முடைய எண்ணங்கள், உணர்வுகள், செயல்பாடுகளே நம் புறச்சூழலை ஆட்டி வைக்கின்றது

    Principle of Vibration

    • இந்த பிரபஞ்சத்தில் இருக்கின்ற அனைத்தும் வெவ்வேறு அலைநிலைகளிலும், அலையியக்கங்களிலும் அதிர்கின்றது
    • நம் எண்ணம், உணர்வு, நம்பிக்கை மற்றும் செயல் இவை அனைத்தும் நம் அதிர்வலைகளைத் தீர்மானிக்கின்றது
    • The Law of Attraction இந்த அடிப்படையிலேயே செயல்படுகிறது
    • நன்றி உணர்வு/அன்பு உணர்வு நம் அதிர்வலைகளை மிக எளிதாக உயர்த்துவதற்கான உபாயமாகும்

    Principle of Polarity

    • இங்குள்ள அனைத்துமே இருநிலைத்தன்மை உடையது ஆகும் ஒவ்வொன்றுக்கும் ஒரு எதிர்ப்பதம் என்ற ஒன்று உண்டு
    • இந்த எதிரியக்கத் தன்மையை அறிந்து செயல்பட்டால் நம்முடைய புரிதலையும், எந்த சூழலையும் நம்மால் எளிதாக மாற்றி அமைக்க முடியும்
    • எதையும் ஏற்றுக் கொள்ளும் (Acceptance) இருவினை ஒப்பே இந்த தன்மையை செயல்படுத்துவதற்கான முக்கிய கூறு ஆகும்

    Principle of Rhythm

    • இந்த பிரபஞ்சம் நாத தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது
    • இந்த சர்வமே ஒரு அழகிய தாளத்தில் அசைகின்றது (Rhythmic motion)
    • நாம் அந்த அசைவின் படி நாம் இசைந்து செல்லுவதே சிறந்தது ஆகும்
    • அந்த பிரபஞ்ச அசைவானது கருணையையும், அன்பையும் அடிப்படையாகக் கொண்டதாகும்
    • அந்த அசைவுக்கு எதிராக நாம் நகரும்போதே இந்த பிரபஞ்சத்தில் விகாரம் உண்டாகிறது
    • நாம் வீழ்ச்சியுற்ற காலத்தை சற்று ஓய்வு எடுப்பதற்கும், புது விஷயத்தை கற்றுக் கொள்வதற்கும், புது மாற்றத்திற்கு தயார்படுத்திக் கொள்ளவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
    • நமக்கு ஆகூழ் (நல்ல வினைக் காலம் ) நடைபெறும் பொழுதே நல்ல நல்ல காரியங்களை நாம் முன்னெடுத்து செய்தல் வேண்டும், ஜீவகாருண்யப் பணி செய்தல் , பெரும் பணியினை செய்துவிட்டு கடை நிலை ஊழியனாக நின்று நன்றி செலுத்தி மகிழ்வடைதல் வேண்டும்

    Principle of Cause and Effect

    • எதுவும் இங்கு எதிர்ச்சியாக நடப்பது இல்லை
    • ஒரு வினைக்கும் ஒரு விளைவு உண்டு
    • நாம் வாழ்க்கை எனும் தண்டனையை அனுபவிக்க படைக்கப்பட்ட கைதிகள் அல்ல! வாழ்க்கையையே படைக்க கூடிய பிரம்ம வித்துக்கள் நாம்
    • நம்முடைய எண்ணங்கள், உணர்வுகள், நம்பிக்கை, செயல்பாடு இவைகளை வெற்றி-தோல்வி தீர்மானிக்கின்றது.

    முடிவுரை

    • பிரபஞ்சத்தின் இந்தக் கொள்கைகளை நாம் தெரிந்து கொள்வதன் மூலம் நம் வாழ்வினை மாற்றி அமைப்பதற்கான புரிதல் கிடைக்கிறது!
    • இதைப் புரிந்து நாம் நன்முயற்சியிலிருந்து ஆண்டவரிடத்தில் நன்றியும், உயிர்களிடத்தில் கருணையும் செலுத்தி வந்தால் பெறவேண்டியதைப் ********பெற்றுக் கொள்ளலாம்

⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜