அன்புடையீர்! வம்மின் இங்கே!❤

 


சிவமயம்

திருச்சிற்றம்பலம்

வெள்ளை ஆடைக்கும் தயவு நிலைக்கும் என்ன தொடர்பு?

வெள்ளாடை அணிவதன் உட்பொருள் என்ன ?

யுத்தம் வெற்றியான பின்பு அடைவது தயவு, சமரசம், ஆதலால் வெற்றி – வெள்ளைக் கொடி
வெள்ளாடை சுத்த சன்மார்க்கத்திற்கு உரிய ஆடையே ஆகும்.

தயவு வெள்ளை என்பதற்கு ஞாயம் எது ?

1.
தயவு என்பது – சத்துவம்
2.
சத்துவம் என்பது – சுத்தம்
3.
சுத்தம் என்பது – நிர்மலம்
4.
நிர்மலம் என்பது – வெள்ளைநிறம்
5.
வெள்ளை என்பது- ஞானம்
6.
ஞானம் என்பது – அருள்
7.
அருள் என்பது தயவு
8.
தயவு என்பது – காருண்யம் ஆகும்.

தயவுக்கு தடைகள் எது என்கிறார் ?

தயவுக்கு தடைகளாக இருப்பது
சாதி ஏற்பாடும், சமய ஏற்பாடும்
ஆகிய கட்டுப்பாட்டு ஆசாரங்களாகும்.
அதாவது.
1. சாதியாச்சாரம்  2. குலாச்சாரம்
3. சாத்திராச்சாரம். 4 ஆசிரமாச்சாரம்
5. கிரியாச்சாரம் 6. தேசாச்சாரம்
7. லோகாச்சாரம் ஆகிய இவைகளே ஆகும்.
ஆகவே இத்தடைகளை நீக்கிக் கொள்ள வேண்டும் என்கிறார்.

நாம் அறிய வேண்டியது என்ன என்கிறார் ?

தத்துவ ஒழுக்கங்கள் பற்றிச் சமயங்கள் ஏற்பட்டன.
தொழில் ஒழுக்கங்கள் பற்றிச் சாதிகள் ஏற்பட்டன.
எனவே மேற்கண்ட ஆசார சங்கற்ப விகல்பங்களும்
சிறிதும் நம் மனதில் பற்றாத வண்ணம் நடந்துக் கொள்ள வேண்டும்.

மேலும் சுத்த சிவசன்மார்க்க சத்திய ஞானாசாரமான.
ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை வளர்ந்து பொது நோக்கம் வந்தால் காருண்யமான தயவு விருத்தியாகும்.
தயவு பெருகினால் – கடவுளறிவையும் அருளையும்,
பெற்று அனந்த சித்தி முத்திகளைப் பெறக்கூடும் என்கிறார்.

Enrich #தமிழ் Enlightened Contents

Receive the latest news

Subscribe To Our Rarely Content! Don't Miss it!

Find Us Here

© 2023 - All Rights Reserved