அன்புடையீர்! வம்மின் இங்கே!❤

#NNA_NET_LOGO

தாமச தின்பண்டங்கள் ஏன் ரூசியாக உள்ளது!

தாமச ஆகாரத்தால் வந்த திருப்தி இன்பமாகிய சந்தோஷ விளக்கம் எதனுடைய விளக்கம் என்று அறிய வேண்டும் ?

தாமச ஆகாரத்தால் வந்த திருப்தி இன்பமாகிய சந்தோஷ விளக்கம் அனாதி பசுகரண மாயா விளக்கம் என்று அறிய வேண்டும் .

விடை : அனாதி பசுகரண மாயா விளக்கம்

Source : ஜீவகாருண்ய ஒழுக்கம் : பகுதி – I

இந்த பிரபஞ்சத்தில், நாம் தொடக்கமே குறிப்பிட முடியாத மிகப் பழமையான ஒரு காலத்தில் (அனாதியில்) நாம் ஒரு பசு போல ஐந்து மலத்தால் கட்டப்பட்டுஅறியாமை என்னும் இருளில் நம்மை நாமே அறியாமல் புழு போலக் கிடந்தோம்

அந்த வேளையில் நமக்கு இருந்த விருப்பங்கள் (Desires) மற்றும் செயல்பாடுகள் (Actions) முழுவதும் இந்த பிரபஞ்சத்தில் இருளை உற்பத்தி செய்யக்கூடிய தாமச மந்ததர விருப்பங்களாகவே இருந்து! அந்த விருப்ப செயல்பாடுகளின் பழக்க வாசனைகள் எல்லாம் அப்போது நம்மிடம் இருந்த கரணத்தில் (மனசில்) பதிவாகி உள்ளன!

அவைகளின் பழக்கத்தால் தான் இப்போது நமது மனம் தாமச உணவுகளைச் சாப்பிட விரும்புகிறது!
மேலும் மேலும் சாப்பிடவும் விருப்பம் கொள்கிறது!

தாமச உணவுகளை எடுத்துக்கொள்ளுவதால் சந்தோஷம் வருகிறதே அது எதனால்..?

தாமச உணவை எடுத்துக்கொள்ளுவதால் வரும் சந்தோஷம் அந்த அனாதி கால பசுகரணத்தில் பதிவான அனாதிப் பதிவுகளே ஆகும்!

அந்த பதிவுகளின் வெளிப்பாடாகத் தான் இப்போது நமக்குத் தாமச செயல்கள் இன்பம் அளிக்கும் செயல்களாகத் தோன்றுகிறது!

ஆகையால் முடிந்த அளவிற்கு இந்த தாமச ஆகாரம் மற்றும் தாமச செயல்களைத் தவிர்த்தல் வேண்டும்”

ஏனெனில், ஆன்ம லாபம் அடைய விரும்புகிறவர்கள் அதிக காரம் மற்றும் எண்ணெய் உணவு இல்லாத சத்துவ உணவையே எப்போதும் எடுத்துக்கொள்ளுதல் வேண்டும்!”

ஏனெனில் தாமச ஆகாரம் நமக்குள் இருளை உற்பத்தி செய்யும்! ஆகையால் நாம் எப்போதும் ஒளி சாந்த உணவையே எடுத்துக்கொள்ளுதல் வேண்டும்

சரி ஒளி சார்ந்த உணவு என்ன..? சத்துவ உணவு என்பன யாவை போன்றவர் நாம் இன்னொரு பதிவில் பார்ப்போம்!

⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜