
திருமந்திரம் » ஏழாம் தந்திரம் » அன்புடைமை » பா_எண்: 0279
அன்பின் உள்ளான் புறத்தான் உடலாயுள்ளான் முன்பின் உள்ளான் முனிவர்க்கும் பிரானவன் அன்பின் உள்ளாகி அமரும் அரும் பொருள் அன்பின் உள்ளார்க்கே அணைதுணை யாமே
‣திரண்டகருத்து :
இறைவன் உண்மையான அன்பின் அகத்தில் உள்ளான்! அவனே புறத்தில் பல உடல்களாகவும் உள்ளான்! படைப்புக்கு முன்பும் உள்ளான்! படைப்பு முடிந்து அவை ஒடுக்கிய பின்னும் உள்ளான்! பெரும் முனிவர்களுக்கு தலைவனாகவும் உள்ளான்! அடியார் உள்ளகத்தில் அன்பினை உருவாக்கி அமரும் அரும் பொருள்! எப்போதும் அன்பில் உள்ளவர்களுக்கே அரவணைக்கின்ற துணையாக உள்ளான்! எல்ல வல்ல இறைவன்!!t