அன்புடையீர்! வம்மின் இங்கே!❤

#NNA_NET_LOGO

#NNA_LIVE : WOMAN CAN ACHIEVE SPIRITUAL PATH?

#NNA_TELEGRAM_LIVE 📢📢

🗣தலைப்பு பெண்களால் ஞான பாதையில் வெற்றியடைய முடியுமா..??🧘🏻‍♀️🏆

🗓நேரலை நடைபெற்ற நாள் : 09/11/2025

📃நேரலையின் சுருக்கம் :

1.ஜீவர்கள் மீது அன்பு ❤️, ஆண்டவர் மீது அன்பு 🙏, மற்றும்
பிரபஞ்சத்தின் மீது
வெறுப்பு ⚡ இதை கடைபிடித்தால் ஞானம் கிடைக்கும் ✨

2.இந்த மூன்று விஷயங்களும் எந்த பாலினத்திற்கும் பொருந்தும் 🚻

3.இந்த பிரபஞ்சம் கிரியா சக்தி 💥, இச்சா சக்தி 🌟, ஞானாசக்தி 🔥
ஆகிய மூன்று சக்திகளால் இயக்கப்படுகிறது.

4.ஆன்மாக்கள் அனைவரும் பெண்களே 👩‍🦳;
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மட்டுமே
ஒருவர் மட்டுமே ஆண் ஆவார் 🕉️.

5.மரணமில்லா பெருவாழ்வு 🕊️ அடைய
பெண்களுக்கு முடியும் என்பது பொதுவான எல்லாருடைய கருத்து.

6.வீட்டிற்குள்ளேயே 🏠 இருக்கும் பெண்கள் வெளி உலகத்தைப்
பார்க்காததால் 🌍, அவர்களுக்கு ஞான
விழிப்புணர்வு மிகவும் குறைவாகவே இருந்தது.

7.அந்தகாலத்தில் பெண்கள் அதிகம் வெளிப்படுத்தவும் 🎭,
explore செய்யவும் 🚶‍♀️ வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை.

8.ஒரு சதுர அடிக்குள் 📦 பெண்களின் வாழ்க்கை அடைத்து
வைக்கப்பட்டதால்தான் அவர்களுக்கு
விழிப்புணர்வு கிடைக்கவில்லை.

9.ஞான அனுபவத்தைப் பெற்ற கணவன் 👨, அந்த அனுபவத்தை தன்
துணைக்கு (மனைவிக்கு) 👩 கொடுக்க வேண்டும் என்பதே திருமணத்தின் நோக்கமாகும் 💍.

10.ஆணின் ஞான அனுபவத்தைப் பெற்று மனைவி கஷ்டப்படாமல் 😌 பாதி பலனை
அடைய வேண்டும்
என்பதே திருமணத்தின் மையக் கருத்து.

11.ஞானத்தைப் பெற்ற ஆண்களே பெண்களை தடுத்து நிறுத்தியது 🚫,
பெண்கள் ஞானப் பாதையில் கம்மியாக இருப்பதற்கான முக்கிய காரணமாகும்.

12.ஔவையார், அன்னை தெரசா, மாயம்மா, காரைக்கால் அம்மையார்
போன்ற ஞானவழியில் சென்ற பெண்கள் 🕊️ பலர் இருக்கிறார்கள்.

13.இயற்கை அன்னை 🌿, இயற்கை சக்தி ⚡ ஆகியவை
பெண் உருவமாகவே சொல்லப்படுகின்றன.

14.ஆண்களை ஒப்பிடும்போது, பெண்களுக்கு ஜீவகாருண்யம் 💗
இயற்கையாகவே அதிகமாக உள்ளது.

15.பெண்கள் ஞான வழியில் செல்வதற்கு குடும்பப் பிணைப்பு 👨‍👩‍👧‍👦 ஒரு இடையூறாக உள்ளது.

16.ஒரு கட்டத்தில் அந்தப் பிணைப்பை புரிந்துகொண்டு 🧠,
அதிலிருந்து அவர்கள் கடந்து வர வேண்டும் 🛤️; எடுத்தவுடன்
வெளியேறினால்
அது சிக்கலாகிவிடும் ⚠️.

17.முற்காலத்தில் வீட்டிலிருந்து வெளியே வர முடியாத நிலை ❌ இருந்ததால்,
பெண்கள் ஞானப் பாதைக்கு வர முடியவில்லை.

18.வள்ளலார் பெண்களுக்கு நிறைய உரிமைகளையும் 🕊️
ஞானத்தையும்
📘 கொடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

19.வள்ளலார் காலத்திற்குப் பிறகு பெரியார், பாரதியார் போன்றோர்
பெண்களுக்கு உரிமை கொடுத்து 🗣️,
ஞானம் அனைவருக்கும் உண்டு என்பதைத் தெரிவித்தனர்.

20.இப்போது பெண்களிடம் ஆண்தன்மை 💪 அதிகமாகி, அவர்கள்
ஆண்களை அடக்கி வருவதை 👀 கண்கூடாகப் பார்க்கிறோம்.

21.வேத காலத்தில் பெண்களுக்கு பூணல் போட்ட கருத்து 📿
இருந்ததாகவும், பின்னாளில்
ஆண் ஆதிக்கம் அதைத் தடுத்ததாகவும் ஒரு கருத்து உள்ளது.

22.ஒரு காலகட்டத்தில் பெண்களின் விருப்பங்களும் ❤️‍🔥,
உணர்ச்சிகளும் 😔 சமூகத்தால் ஒடுக்கப்பட்டு கம்ப்ரஸ் செய்யப்பட்டுள்ளது.

23.ஒரு இடத்தில் ஆற்றல் குவிந்தால் ⚡, அது மீண்டும் பீறிட்டு
வெளிப்பட்டு 🔥 தன்
தன்மையைக் காட்டும்; இதுவே தற்போது இந்த காலத்தில் பெண்கள் தம்மை வெளிப்படுத்துவதற்கு காரணம்.

24.தற்போது பெண்கள் CEO 💼, startup உருவாக்குபவர்கள்🚀
என பல
உயர் பதவிகளில் இருக்கிறார்கள்.

25.பெண்கள் இப்போது ஆண்களை ஆதிக்கம் செலுத்தி
🧘‍♀️‘
நீங்கள் உட்காருங்கள், நான் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்கிறேன் 
என்ற நிலைக்கு வந்துள்ளது 💼 ஒரு
நிதர்சனமான உண்மை.

26.பெண்கள் வேலை மற்றும் சம்பாத்தியத்தில் 💰 சுதந்திரம் பெற்றாலும்,
வீட்டிலும் 🏠 வெளியிலும் 🌆
வேலை செய்வது என்ற அடுத்த “லாக்” 🔐 கிற்குள் சென்றுவிட்டார்கள்.

27.சார்ந்திருத்தல், போட்டி 🤼‍♀️, பொறாமை 😒, புறங்கூறுதல் 👀, சுயநலம் 🙄
மற்றும்
அதிகப் பிணைப்பு 🔗 ஆகியவை பெண்களுக்கு ஞானப் பாதையில் இருக்கும் தடைகள் 🛑.

28.ஜீவகாருண்யம் என்பது தன் பிள்ளையை மட்டும் பார்க்காமல் 👶,
பக்கத்து வீட்டுப் பிள்ளையையும் 🧒 தன்
பிள்ளையாகப் பார்க்கும் குணம் வெளிப்பட வேண்டும் 💛.

29.பெண்களுக்கு பணி செய்யும் திறமை உள்ளது 💼✨.

30.உள்நோக்கிப் பயணம் 🧘‍♀️ செய்வதற்கான வாய்ப்பு வீட்டுக்குள்ளே
பெண்களுக்கு அதிகமாக உள்ளது, இது அவர்களுக்கான ஒரு தவமாக அமையலாம் 🔥.

31.சிவம் என்பது அறிவு 🧠, சக்தி என்பது ஆற்றல் ⚡; சிவம்
எப்படிச் செயல்பட வேண்டும் என்று
சக்திக்கு வழிகாட்ட வேண்டும் 🕉️.

32.ஆண்/பெண் என்பது உடல் ரீதியானது அல்ல; எந்தச் சோலுக்கு
ஆன்ம அறிவு அதிகமாக உள்ளதோ 🌟, அதுவே ஆண்.

33.புலம்புதல் 😢, வீணுக்கு அழுதல் 😭, கஷ்டப்படுதல் 😓 போன்ற
தன்மைகள் உள்ள ஆண், உண்மையில்
பெண் தன்மை கொண்டவரே.

34.வள்ளல் பெருமான் ‘பெண்ணினுள் ஆணும், ஆணினுள் பெண்ணும்’ 🌀
அண்ணுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி அகவலில் கூறுகிறார்.

35.வள்ளல் பெருமானின் பார்வையில் 👁️, ரூப பேதத்தைப் பார்த்து
ஆண்பெண் என்று பிரிப்பது அறியாமை 🌑.

36.பெண்களின் ஞானப்பாதைக்கு சரியான ஆதரவும் 🤝 நேரம் ⏳ கொடுப்பதும் அவசியம்.

37.ஞானம் என்றால் enlightenment ✨; நம்முடைய ஆன்ம நிலையை
நாம் அறிவதுதான்
முக்தி 🕊️, அங்கிருந்துதான் சாதனம் ஆரம்பிக்கிறது.

38.பெண்களை இழிவுபடுத்திப் பாடப்பட்ட சில நூல்கள் 📚, பெண்களுக்கு அல்ல;
மாறாக,
ஞானிகள் ஆண்களுக்கு ஏற்படும் பெண் மோகத்திலிருந்து ❤️‍🔥 மீள்வதற்காக எழுதப்பட்ட வரிகள்.

39.மகளிர் இழிவாக உள்ள பாடல் வரிகள் எல்லாம் பெண்களை
இழிவுபடுத்த அல்ல ❌; மாறாக பெண் மீது உள்ள மோகத்தை 😵‍💫 இழிவுப்படுத்த மட்டும் தான்!

40.ஆண்களுக்கு பெண் ஆசை ❤️ இடையூறாக இருப்பது போல,
பெண்களுக்கு பொன்னாசை 💎 (பொருட்கள், மேக்கப் 💄, நகைகள்) பெரிய தடையாக உள்ளது.

41.ஒரு பெண் தனது குறிக்கோளில் 🎯 (ஞானம்) தீர்க்கமாக இருந்து,
எமோஷனல் விஷயங்களில் ❤️ நடுநிலை அடைய வேண்டும் ⚖️.

42.பெண்களுக்கு ஒரு விஷயத்தில் ஈடுபாடு வந்தால் 🔥, அதை அவ்வளவு
சீக்கிரம் விட மாட்டார்கள்; ஆனால் அந்த ஆற்றலை எதில் போடுகிறோம் 🎯 என்ற தெளிவு குறைவாக உள்ளது.

43.பெண்கள் மாறிக்கொண்டே இருக்கும் மனநிலையில் இருப்பார்கள் 🌙🔄.

44.ஞானப்பாதையில் சித்திகளை பெறும் பெண்களை
முழுநிலையை பெறாது;
சிறு தெய்வங்களாக 🕉️ போய்விடுகிறார்கள்.

45.பிறகு பாராட்சம் பார்க்காமல் 👁️ கெட்டவர்களுக்கும் அருள்புரிகிறார்கள் 🙏
என்பது வருத்தம் அளிக்கிறது 😔.

46.நல்ல பக்தியில் 🕉️ இறைகாதல் ❤️ செய்யும் ஆன்மாக்களை
இடையில் உள்ள கடவுளர்கள் ✨ கவர்ந்து சென்றுவிடுகிறார்கள்.

இந்த பதிவின் சிறு குறிப்பினை அறிய
#NNA_TELEGRAM குழுவில் இணையவும்!