அன்புடையீர்! வம்மின் இங்கே!❤

#NNA_NET_LOGO

#NNA SPIRITUAL NEWS -- JULY 2025 UPDATE

கட்டாயம் படிக்க வேண்டிய சில முக்கிய தகவல்கள்!

என்பது ஏதோ மற்ற Media News போன்று
Content இல்லாமல் போடப்படும் செய்தி அல்ல! நடைமுறையில் ஆன்மீக வாழ்க்கையில் நம்மை சுற்றி செய்திகளை தெரிந்து கொள்ள வேண்டியதும் அவசியம் அப்போது தான் உலக மாயையின் சூழ்ச்சிகள் எப்படிப்பட்டது என்பதை அறிய முடியும்!

மேலும் ஒவ்வொரு செய்திகளின் தலைப்பின் முடிவிலும் கவனிக்கப்பட வேண்டியவை என்ற தலைப்பை படிக்கவும் அதில் தான் முக்கிய குறிப்புகளை தந்து உள்ளோம்! [காணொளியில் போட்டால் தாமதம் ஆகிறது என்பதால் இந்த முயற்சி] 

தாய்லாந்து துறவிகளுக்கு வந்த சோதனை!

📌 கோல் அடித்தார் மிஸ் கோல்ஃப்:

  • தாய்லாந்தில் மைனர் ‘மிஸ் கோல்ஃப்’ என அழைக்கப்படும் பெண் கைது.
  • இவர் புத்த மத துறவிகளை பாலியல் உறவு வலையில் சிக்க வைத்து, அதன் பின்னர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்து மிரட்டி பணம் பறித்ததாக குற்றச்சாட்டில் கைதியாகி உள்ளார்!

💰 ₹100 கோடி பணம் மோசடி :

  • கடந்த 3 ஆண்டுகளில் 9 துறவிகளிடம் இருந்து 385 மில்லியன் (சுமார் ₹100 கோடி) மேல் பணம் பறிக்கப்பட்டது.
  • வீட்டில் 80,000+ புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பறிமுதல் – அனைத்தும் மிரட்டலுக்காக பயன்படுத்தப்பட்டவை.

📱 திடீரென துறவத்தை விட்டுச்சென்ற துறவிகள் :

  • 2023 ஜூன் மாதம், ஒரு மடத்தின் தலைவர் 🕉️ திடீரென துறவறத்தை விட்டு வெளியேறியதை 🏃🏻‍♂️ தொடர்ந்து இந்த விசாரணை தொடங்கியது.
  • கோல்ஃப், அந்த துறவியிடம் 👨🏻‍🦲 குழந்தை 👶🏻 ஏற்பட்டதாகக் கூறி, குழந்தை ஆதரவு தொகையாக ரூபாய் 70 லட்சத்துக்கு மேல் 💰 கேட்டு உள்ளார்.

🏛️ புத்த மத அமைப்பின் நடவடிக்கை:

  • சங்க சுப்ரீம் கவுன்சில் 👥, துறவற விதிகளை 📜 மறு ஆய்வு செய்ய குழு அமைக்க உள்ளது.
  • விதி மீறுபவர்களுக்கு ❌ அபராதம் 💸 மற்றும் சிறை தண்டனை 🏛️ விதிக்க அரசு முடிவு.
  • தாய்லாந்து மன்னர் 👑 வஜிரலோங்கோர்ன், 2024 ஜூன் மாதம், 81 துறவிகளுக்கான சிறப்பு பட்டங்களை 🎖️ ரத்து ❌ செய்தார்.

🔁 புதிய சம்பவமல்ல:

  • 2017ல், விராபோல் சுக்போல் 🧑🏻‍🦲 என்ற துறவி ஆடம்பர வாழ்க்கை, பாலியல் குற்றம் 😶‍🌫️, பண மோசடியில் ஈடுபட்ட விவகாரம்.
  • 2022ல், நான்கு துறவிகள் 🧑🏻‍🦲 போதைப்பொருள் வழக்கில் கைது – துறவறத்திலிருந்து நீக்கப்பட்டனர்.
  • 2025 ஆம் ஆண்டில் சீனாவில் 🇨🇳 ஷாவோலின் மடாலய தலைவர் ஷி யோங்சின் மீது கோயில் நிதி ஊழல் 💰 மற்றும் பாலியல் தவறுகள் 😔 குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

👉🏻 இந்தச் சம்பவம், புத்த மத அமைப்பில் பெரும் அதிர்வலை 🌊 ஏற்படுத்தியுள்ளது.

⚠️ கவனிக்கப்பட வேண்டியவை :

  • துறவு ஒழுக்க வாழ்வில் வசிக்கும் புத்த துறவிகளுக்கே காம ஆசையை ❤️‍🔥 உண்டு பண்ணி அவர்கள் ஒழுக்க வாழ்வில் இருந்து மாயை 🌀 திசை திருப்புகிறது என்றால் மாயையின் வலிமை என்ன என்று நாம் அறிந்து கொள்ள வேண்டும்!
  • அதே போன்று ஒரு அமைப்பில் ஒரு பெண்ணை 👩🏻 வைத்து நன்மையையும் ✅ உண்டாக்க முடியும், தீங்கையும் ❌ உண்டாக்க முடியும் என்பது தெரிகிறது! ஏனெனில் பெண்ணுக்கு ஆற்றல் அதிகம் 💪🏻! அவர்களை மிகவும் தெளிவாக கையாள வேண்டும்! 💡
  • துறவிகளாலே ஒழுக்கத்தில் நிற்க முடியவில்லை நம்மால் முடியாது என நினைக்க கூடாது! 🙅🏻‍♂️ மாறாக நாம் இருக்கும் இந்த யுகத்தில் 🕰️ ஒரு நாள் நாம் நல்ல ஒழுக்கத்தில் நின்றாலே அது ஒரு யுகத்திற்கு ஒழுக்கத்திற்கு நின்றதுக்கு சமமாகும் என்பதை மறக்கக் கூடாது! ✨

தெற்கை வணங்கும் வடக்கு🙏🏻

📍 நிகழ்ச்சி மற்றும் இடம்

  • 🇮🇳 பிரதமர் நரேந்திர மோடி அரியலூர் மாவட்டத்தில்
    அமைந்துள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரியச் சிறப்பிடம்
    கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் சோழ பாரம்பரிய விழாவில் கலந்து கொண்டார்.

🎉 விழாவின் சிறப்பு அம்சங்கள்

  • 🛕 ஆடி திருவாதிரை திருவிழாவில் பங்கேற்றார்.
  • 🙏 கோயிலில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டு,
    அதன் ஆன்மீக மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
  • 🕉️ “சிவ தரிசனம் மிக ஆழமான ஆன்மிக அனுபவமாக இருந்தது,” என்று பிரதமர் தெரிவித்தார்.


🪙 நினைவு வெளியீடுகள் மற்றும் சிலைகள்

  • 🥈 ராஜேந்திர சோழரின் நினைவு வெள்ளி நாணயத்தை பிரதமர் வெளியிட்டார்.
  • 🗿 ராஜராஜ சோழர், ராஜேந்திர சோழர் ஆகியோருக்கு தமிழ்நாட்டில் சிறப்பு சிலைகள் அமைக்கும் திட்டத்தை அறிவித்தார்.

🌟 சோழர்களின் சாதனைகள்

  • 🌏 இலங்கை, மலேசியா, தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் சோழர்கள் மேற்கொண்ட வணிகம் மற்றும் தொடர்புகளை நினைவுபடுத்தினார்.
  • 🌊 வடக்கிலிருந்து கங்கை நீரை கொண்டுவந்த ராஜேந்திர சோழரின் வரலாற்றை பிரதமர் சுட்டிக்காட்டினார்; அதே போன்று காசியிலிருந்து நிகழ்ச்சிக்கு கங்கை நீர் கொண்டுவரப்பட்டது.
  • 🗳️ சோழர்கள் காலத்தில் இருந்த தேர்தல் முறைகள் ஐரோப்பாவின் 📜 மாக்னா கார்டாவை விட பழமை வாய்ந்தவை என்று பிரதமர் குறிப்பிட்டார்.

⚠️ கவனிக்கப்பட வேண்டியவை :

  • மோடி அவர்களின் இந்த வருகையால் தமிழ்நாட்டின் கலாசாரத்தைப் பற்றியும், சோழர்களின் பெருமையினை பற்றியும் இந்திய நாடு முழுவதும் பேச்சுப்பொருள் ஆனது! 🗣️🏛️✨
  • இது மட்டும் இல்லாமல் கடந்த சில மாதங்களாகவே வட மாநில ஊடகங்களும் சரி, YouTubers-ம் தமிழ்நாட்டின் கலாச்சாரப் பெருமை, பொருளாதார வளர்ச்சி 📈, கல்வி 📚 மற்றும் மருத்துவத்தின் சிறப்பு 🩺 பற்றி அதிகம் பேசி சிறப்பிக்கிறார்கள்! 👏🌟
  • இந்தியா என்றாலே அது வெறும் வடக்கில் உள்ள தாஜ் மஹால், டெல்லி, மும்பை என்ற அடையாளங்கள் மாறி வருகிறது! 🗺️🔄 வடக்கு மக்கள் வேறு, தெற்கு மக்கள் வேறு என்ற புரிதலும் இப்போது வந்து கொண்டு உள்ளன. 🤝🌍
  • இனி தெற்கு நாட்டின் பெருமை உலகம் எங்கிலும் பரவ ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கலாம்! 🚀🌐
  • வெளிநாட்டிற்குத் திருடப்பட்ட சிலைகளை மீட்டுத் தருவதாகப் பேசிய பிரதமர் மோடி, கீழடி ஆராய்ச்சிக்கு ஆதரவாகப் பேசாதது வருத்தம் அளிக்கிறது! 😔💔ஏனென்றால், சிலைகளைக் காட்டிலும், அறிவியல் ஆராய்ச்சி ஆதாரங்களே தமிழர் பெருமையினை உலக அளவில் எடுத்துச் செல்ல முடியும்! 🔬💡💪
  • எத்தனை அரசியல் தலைவர்கள் இராஜராஜ சோழனைப் பற்றி பெருமையாக பேசினாலும் அவர்கள் தஞ்சைப் பெரிய கோவிலுக்கு நேரே செல்ல அஞ்சப்படுகிறார்கள் என்பது குறிப்பிட தக்கது!😰

பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்துவிட்டது

🌍 பூமியின் சுழற்சியின் வேகம் அதிகரிப்பு:

  • பூமி தன்னை சுற்றும் வேகம் தற்போது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. 🔄
  • இதனால் நாளின் நீளம் ⏳ வழக்கமான 24 மணி நேரத்தை விட குறைவாகிறது.

🔄 சமீபத்திய மாற்றங்கள்:

  • 2025 ஜூலை 9-ஆம் தேதி பூமி வேகமாகச் சுற்றியது. 📅
  • 2025 ஜூலை 22 மற்றும் ஆகஸ்ட் 5 தேதிகளில் 🌕 சந்திரனின் நிலை பூமியின் சுழற்சியை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • நாள் நீளம் 1.3 முதல் 1.51 மில்லி விநாடிகள் வரை குறையும். 🕐

🌀 பூமியின் சுழற்சியில் மாற்றத்தை ஏற்படுத்தும் காரணங்கள்:

  • 🌙 சந்திரன் மற்றும் ☀️ சூரியனின் ஈர்ப்பு விசை
  • பூமியின் காந்தப்புலம் 🧲
  • மனித மற்றும் இயற்கை நடவடிக்கைகளால் ஏற்படும் நிறை (mass) மாற்றங்கள் 👥🌳

🕰️ கடந்த கால மாற்றங்கள்:

  • 100 முதல் 200 கோடி ஆண்டுகளுக்கு முன்புஒரு நாள் 19 மணி நேரமே நீடித்தது.
  • சந்திரனின் தூரம் அதிகரிக்க 🌙➡️, பூமியின் சுழற்சி படிப்படியாக மெதுவானது 🐢.
  • 1970-களை விட 2020-இல் பூமி வேகமாகச் சுழன்றது 🚀.
  • மிகக் குறுகிய நாள் ஜூலை 5, 2024-இல் பதிவு (1.66 மில்லி விநாடிகள் குறைவு) 📉.

📝 குறிப்பிட்ட காரணங்கள்:

  • 🌙 சந்திரனின் தூர மாறுபாடு
  • காலநிலை மாற்றங்கள் (❄️ பனி உருகுதல், 💧 நிலத்தடி நீர் நகர்வு)
  • 🌎 பூகம்பங்கள் மற்றும் பருவகால மாற்றங்கள்
  • உதாரணமாக, 2011 ஜப்பான் பூகம்பம் 🇯🇵🌊 ஒரு நாளின் நீளத்தை 1.8 மைக்ரோ விநாடிகள் குறைத்தது.

⚠️ கவனிக்கப்பட வேண்டியவை :

  • மனித மனத்திற்கு நிலவிற்கும் 🌙🧠 பெரிய தொடர்பு உள்ளது! ஞானிகள், அருளாளர்கள் 🙏 மனதை நிலவோடு ஒப்பிட்டு பாடுவார்கள்!
  • பூமி சுழற்சி வேகம் அதிகரிப்பதால் 🌍⚡ மக்கள் மனதின் செயல்பாடுகளும் மிக வேகமாக செயல்பட தொடங்கும்! இதனால் தேவையில்லாத எண்ணங்கள் பல எழுதல் வழக்கம் ஆகும் 🤯
  • விகார குணங்கள் மேலோங்கும் 😠😩 இதனால் பல சீர்கேடான செயல்கள் நடக்கும்! சந்திர மண்டல ஆன்மாக்களின் ஆட்டம் சற்று அதிகமாக இருக்கும்! எ:கா. 🕺🏻🩰 குத்தாட்டம் செய்யும் சிறு தெய்வங்கள்
  • நமக்கு சமந்தமே இல்லாத ஆசைகள் எல்லாம் மனதில் எழும் 💭; அதில் அடிவாங்கி நமக்கு பாடங்கள் எடுக்கப்படும்! எனவே மக்களே உஷார்! 🚨
  • அமாவாசை மற்றும் பெளர்ணமி போன்ற நிலவின் ஆதிக்கம் அதிகம் உள்ள தினங்களில் 🌑🌕 சிந்தனை ஓட்டத்தை அதிகம் ஓட விடாமல்; தியானம் செய்து 🧘🏻‍♂️ இரவு விரைவாக உறங்கிவிடுங்கள்! 😴 [இந்த குறிப்பு மனத்தால் அதிகம் பாதிக்கப்படுபவர்களுக்கு]

அசுரர்கள் வசமாகும் ஆன்மீக ஸ்தலங்கள்

தர்மஸ்தலா வழக்கு 🛕⚖️

  • தர்மஸ்தலா🛕 வழக்கு⚖️ இந்தியா🇮🇳வின் கர்நாடக🏞️ மாநிலம், தக்ஷிண கன்னடா🗺️ மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற🌟 தர்மஸ்தலா🛕 மஞ்சுநாதேஸ்வரர்🙏 கோவிலில் சம்பவித்ததாக📢 கூறப்படும் ஒரு மிக அதிர்ச்சிகரமான😱 குற்ற👎 வழக்காகும். இது 2025-இல்📆 பெரும் கவனத்தை👀 பெற்றுள்ளது!💥

100+ மேற்பட்ட பெண்கள் பலி⚰️ :

  • 1995📅 முதல் 2014📅 வரை உள்ள காலகட்டத்தில்⌛, தர்மஸ்தலா🛕 கோவில் நிர்வாகத்தில்🧑‍💼 தூய்மை🧹 பணியாளராக🧑‍🔧 பணியாற்றிய👷 ஒருவரால்,

    100+ மேற்பட்ட👩‍🦰👧 பெண்கள் மற்றும் மாணவிகள்📚 பாலியல்💔 வன்கொடுமை😞 செய்யப்பட்டு, கொலை🔪 செய்யப்பட்டு, கோயில்🛕 வளாகத்திலேயே நிர்வாண நிலையில் புதைக்கப்பட்டதாக⚰️வும், சிலரை அருகில் உள்ள நீர்கரை💧யில் வீசியதாகவும் வாக்குமூலம்🗣️ கொடுத்து ஒரு நபர்🧑 வழக்கு📋 பதிவு செய்தார்!📝

புகார் பதிவு📝:

  • 2025📅 ஜூலை 3-ஆம் தேதி📆 மங்களூர்🌇 காவல்👮‍♂️ நிலையத்தில் இந்த அதிகாரப்📜 புகார் மற்றும் எஃப்.ஐ.ஆர்📑 பதிவு செய்யப்பட்டது. வாக்குமூலம்🗣️ அளித்தவர் முறையான பாதுகாப்பு🛡️ வழங்கிய பிறகே, உடல்கள்🦴 புதைக்கப்பட்ட இடங்களை🗺️ காட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம்📢 தயாராக இருப்பதாக தெரிவித்தார்.🗨️

இதை ஏன் அவர் இப்போது📅கூறினார்🤔? :

  • 10 ஆண்டுகளுக்கு🕰️ முன்பு வரை அங்க தான் அவர் பணியாற்றி👨‍🔧 உள்ளார், அங்கு தனது உறவினர்👨‍👩‍👧‍👦 ஒருவருக்கும் இது போன்ற நிகழ்வு🎭 நடந்ததால் அவர் அந்த வேலைவிட்டு🧳 விட்டு குடும்பத்துடன்👨‍👩‍👧‍👦 தலைமறைவு ஆகிவிட்டார்! தலைமறைவு ஆகிய பிறகும் அவரால் நிம்மதியாக😞 வாழ முடியவில்லை என்றும் இறந்த பெண்களின்👧 ஓலை குரல்கள்🗣️ தன் காதில்👂 எதிர் ஒளிக்கின்றது🌫️ என்றும் அந்த இறந்த பெண்களின்👧 ஆன்மாக்களுக்கு🕊️ நீதி⚖️ கிடைக்கும் பொருட்டு அவர் இந்த வாக்குமூலத்தை🗣️ கொடுக்க முன் வந்துள்ளார்!🙏

எலும்புகள் கிடைத்தன🦴 :

  • SIT🔍 குழு புலனாய்வு🕵️‍♂️ செய்து பல இடங்களில் தோண்டும்🪓 பணிகளை துவக்கியது. தொடக்க அகழாய்வில், சில இடங்களில் மனித🧑 எலும்பை🦴 கண்டறிந்து உள்ளனர்.🔎

அரசியல்🏛️ செல்வாக்கு & சமூக🌏 தாக்கம் :

  • இந்த வழக்கு⚖️ கர்நாடக🏞️ மக்களை👫, இந்தியாவையே🇮🇳 அதிரவைக்கின்ற😱 அளவுக்கு பரபரப்பை💥 ஏற்படுத்தியுள்ளது. கோவில்🛕 நிர்வாக🧑‍💼 அதிகாரி👨‍💼 மற்றும் சில அரசியல்🏛️ செல்வாக்கு🤵 உடையவரின் பெயர்களும்📇 குற்றச்சாட்டுகளில்👎 தொடர்பாக உள்ளதும் என்றும், இதனால் இந்த விசாரணை🔍 முழுமையாக செய்யப்படுமா எனப் பல்வேறு சமூக🌍 அமைப்புகள் கேள்வி எழுப்பி உள்ளனர்!

இது புதிது அல்ல🕰️ :

  • 1987, 2003, 2012📆 ஆகிய வருடங்களிலும், தர்மஸ்தலா🛕வில் பெண்கள்👧 தொடர்பான பாலியல்💔 வன்கொடுமை😞, கொலை🔪, காணாமல் போன👤 சம்பவங்கள் பதிவாகி உள்ளதாக சொல்லப்படுகிறது📝. குறிப்பாக 2003-ஆம் ஆண்டு📅 காணாமல் போன👤 மருத்துவ👩‍⚕️ மாணவி📚 வழக்கு குறிப்பிடதக்கது!🗂️

சம்பவத்தின் இன்னொரு கோணம்🕵️‍♂️ :

  • சிலர்🙎‍♂️ இவர்கள் இளம்👧 பெண்களை👩‍🦰 சில 🔝முக்கிய புள்ளி (VVIP) தலைவர்களின்🕴️ காம ஆசைகளுக்கும்❤️, அவர்களின் வேண்டுதல்🙏 கருதி செய்யும் யாகத்திற்கு🕯️ இளம்👧 பெண்களை நரபலி ☠️ கொடுக்க பயன்படுத்தியதாகவும் சில தரப்பினர்🙍‍♂️ கூறுகின்றார்கள்!

    மேலும் தன்னை விட வயதில் குறைவாக உள்ள இளம்👧 பெண்களுடன் உடல் உறவு🤝 வைத்துக்கொண்டால் இளமையாக👦 இருக்க முடியும் என்ற முட்டாள்🤦‍♂️ தனமான மூட நம்பிக்கையால்🙄 இவர்கள் இளம்👧 பெண்களை அதிகம் குறிவைத்து🎯 உள்ளார்கள் எனவும் ஒரு பக்கத்தினர்🙎‍♀️ கூறுகின்றனர்!

    மொத்ததில் தர்மஸ்தலா🛕 அதர்மஸ்தலாவாக😈 மாறிவிட்டது!😞

⚠️ கவனிக்கப்பட வேண்டியவை :

  • இந்த கொடூர😱 சம்பவத்தில் இருந்து என்ன தெரியவருகிறது📖 என்றால் மதங்களின்🛐 பெயரிகளிலே பல துஷ்பிரயோக❌ செயல்கள் நடந்தேறி📉 வருகின்றன! இதனால் ஆன்மீக🕉️ தளங்களுக்கு செல்ல😬 சற்று பயமாக😰 தான் உள்ளது!
  • மத குருமார்களும்🙇‍♂️, சில மடலாயங்களின்🏯 தலைவர்களுமே தன்னை நம்பி🙏 வரும் மக்களை👫 சுரண்டுகிறார்கள்!😈 இப்போது ஒருபடி மேல போய்⏫ பக்தர்களை🙏 கொன்றும்🔪 விடுகிறார்கள்! 😵⚰️ ஆகவே மக்களே உஷார்!⚠️ குறிப்பாக பெண்கள்👧 ஆன்மீக🕉️ பாதையில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்!🤫
  • இப்போது உள்ள பெரும்பாலான🔢 வழிப்பாட்டு தலங்களின்🛕 நிர்வாகம் இது போன்ற அசுரர்களின்😈 கையிலேயே✋ உள்ளது என்பது நிதர்சனம்!
  • இனி இறைவனை🙏 உள்முகமாக😊 தேட பழகுங்கள்! பரிகாரம்🪔, பூசை🛐 என திருத்தலத்திற்கு🛕 சென்றால் தான் நல்லது👍 என போட்டி🏁 போட்டு அடித்துக்கொண்டும்; சிறப்பு தரிசனத்திற்கு✨ காசு💰 கொடுத்துக் கொண்டு இல்லாமல்! சிறப்பற்று🎯 வாழும் ஏழை மக்களுக்கு🤝 வேண்டியதை செய்வதால் இறை🙏 அருளை பெறலாம் என்பது உண்மை!✔️
  • உலகை🌏 முழுமையாக காணாமலும்👀, வாழ்க்கையை😶 நிறைவாக அனுபவிக்காமல்💔 உயிர்🧬 இறந்த அந்த பிஞ்சு👧 ஆன்மாக்கள்🕊️ நற்கதி🛤️ பெற வேண்டும் என நாம் ஒரு பிரார்த்தனை🙏 செய்வோம்!🕯️

Enrich #தமிழ் Enlightened Contents

Receive the latest news

Subscribe To Our Rarely Content! Don't Miss it!

Find Us Here

© 2024 - All Rights Reserved