அன்புடையீர்! வம்மின் இங்கே!❤

#NNA_NET_LOGO

திருவருட்பா: சிற்சபை விளக்கம் (பாடல்கள் எண் : 3770-3779)

#3770
சோறு🍛 வேண்டினும் துகில்👗 அணி📿 முதலாம்
சுகங்கள்😎 வேண்டினும், சுகம் அலால் சுகமாம்
வேறு வேண்டினும்; நினை அடைந்து அன்றி
மேவு ஒணாது எனும் மேலவர் உரைக்கே

மாறு வேண்டிலேன்! ❌ வந்து நிற்கின்றேன்🙏
வள்ளலே!💗 உன்றன் மனக் குறிப்பு அறியேன்! 😔
சாறு வேண்டிய பொழில் வடல் அரசே 🌳
சத்தியச் சபைத் தனிப் பெரும் பதியே ✨

#3771
எஞ்சல் இன்றிய துயரினால், இடரால் 😥
இடுக்குண்டு, ஐய! நின் இன்னருள் விரும்பி 🥰
வஞ்ச நெஞ்சினேன் வந்து நிற்கின்றேன்!

வள்ளலே! உன்றன் மனக் குறிப்பு அறியேன்! 😔
அஞ்சல் என்று எனை ஆட்கொளல் வேண்டும் 🙌
அப்ப! நின் அலால் அறிகிலேன் ஒன்றும் 🙏
தஞ்சம்😖🙏 என்றவர்க்கு அருள்✨ வடல் அரசே 👑
சத்தியச் சபைத் தனிப் பெரும் பதியே. ✨

#3772
சூழ்வு இலாது உழல் மனத்தினால் சுழலும் 🌪️
துட்டனேன்! அருள் சுகப் பெரும் பதி நின்
வாழ்வு வேண்டினேன்!🙏 வந்து நிற்கின்றேன்
வள்ளலே உன்றன் மனக் குறிப்பு அறியேன் 😔
ஊழ் விடாமையில் அரை கணம்⏳ எனினும்
உன்னை விட்டு அயல் ஒன்றும் உற்று அறியேன்😖

தாழ்வு இலாத சீர் தரு வடல் அரசே👑
சத்தியச் சபைத் தனிப் பெரும் பதியே!✨

#3773
ஆட்டம் ஓய்கிலா வஞ்சக மனத்தால்
அலைதந்து ஐயவோ😵‍💫 அயர்ந்து உளம் மயர்ந்து
வாட்டமோடு இவண் வந்து நிற்கின்றேன் !
வள்ளலே உன்றன் மனக் குறிப்பு அறியேன் 😔
நாட்டம்💗 நின் புடை அன்றி மற்று அறியேன்
நாயினேன் பிழை பொறுத்து இது தருணம் 😖🙏
தாள் தலம் தருவாய் வடல் அரசே
சத்தியச் சபைத் தனிப் பெரும் பதியே. 🙏👑✨

#3774
கருணை ஒன்று இலாக் கல் மனகுரங்கால்🐒
காடு, மேடு உழன்று🎡 உளம் மெலிந்து⏬ அந்தோ!!🗣️
வருண🌧️ நின் புடை வந்து நிற்கின்றேன்!!
வள்ளலே உன்றன் மனக் குறிப்பு அறியேன்! 😔
அருணன்☀️ என்று எனை அகற்றிடுவாயேல்
ஐயவோ!!😖 துணை அறிந்திலன்!!
இதுவே தருணம் எற்கு அருள்வாய்
வடல் அரசே!! 👑 சத்தியச் சபைத் ✨
தனி பெரும் பதியே. 🙏

#3775
🎡கரண வாதனையால் மிக மயங்கிக்😵‍💫
கலங்கினேன்🤯 ஒரு களைகணும் அறியேன்!
மரணம் நீக்கிட வந்து நிற்கின்றேன்💀
வள்ளலே!! உன்றன் மனக் குறிப்பு அறியேன்
இரணன்👹 என்று எனை எண்ணிடேல்! பிறிது ஓர்
இச்சை💗 ஒன்று இலேன்❌ எந்தை நின் உபய
சரணம் 💬🙏 ஈந்து அருள்வாய் வடல் அரசே👑
சத்தியச் சபைத் தனிப் பெரும் பதியே.🙏✨

#3776
தூய நெஞ்சினேன் அன்று🤍❌ நின் கருணைச்
சுகம் விழைந்திலேன் 😇❌ எனினும் பொய் உலக🌍
மாயம் வேண்டிலேன்🤩🕺🏻 வந்து நிற்கின்றேன்!!
வள்ளலே! உன்றன் மனக் குறிப்பு அறியேன்
ஈய🤲🏻 வாய்த்த நல் தருணம் ஈது அருள்க!🙏
எந்தை நின் மலர் இணை அடி அல்லால் 🎁
தாயம்🤰🏻 ஒன்று இலேன்!! தனி வடல் அரசே👑
சத்தியச் சபைத் தனிப் பெரும் பதியே. ✨

#3777
சிரத்தை ஆதிய சுபகுணம் சிறிதும்
சேர்ந்திலேன்!❌ அருள் செயல் இலேன்!😓
சாகாவரத்தை வேண்டினேன்!🙏 வந்து நிற்கின்றேன்!
வள்ளலே! உன்றன் மனக் குறிப்பு அறியேன்!
கரத்தை நேர் உளக் கடையன் என்று எனை
நீ கைவிடேல்! ஒரு கணம் இனி ஆற்றேன் ✋
தரத்தை🥇 ஈந்து அருள்வாய்🤲🏻 வடல் அரசே👑
சத்தியச் சபைத் தனிப் பெரும் பதியே. 🙏✨

#3778
பத்தியம் சிறிது உற்றிலேன் உன் பால்
பத்தி ஒன்று இலேன் பரம நின் கருணை 🙏
மத்தியம் பெற வந்து நிற்கின்றேன்
வள்ளலே உன்றன் மனக் குறிப்பு அறியேன் 😔
எத்தி அஞ்சலை என அருளாயேல்
ஏழையேன் உயிர் இழப்பன் உன் ஆணை 🥺
சத்தியம் புகன்றேன் வடல் அரசே👑
சத்தியச் சபைத் தனிப் பெரும் பதியே. 🙏✨

#3779
கயவு செய் மத கரி🐘 எனச் செருக்கும்
கருத்தினேன்👺 மனக் கரிசினால் அடைந்த
மயர்வு😵‍💫 நீக்கிட வந்து நிற்கின்றேன்!
வள்ளலே உன்றன் மனக் குறிப்பு அறியேன் ☹️
உய உவந்து அருள் புரிந்திடாய் எனில் என்
உயிர் தரித்திடாது! 💔 உன் அடி ஆணை
தயவு செய்து அருள்வாய் வடல் அரசே
சத்தியச் சபைத் தனிப் பெரும் பதியே. 🙏👑✨

⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜