
#2
போகம் ஆதியை விழைந்தனன் வீணில் பொழுது போக்கிடும் இழுதையேன் ⌛ அழியாத்
தேகம் ஆதியைப் பெற முயன்று அறியேன் சிரங்கு நெஞ்சகக் குரங்கொடும் உழல்வேன் 🐒
காகம் ஆதிகள் அருந்த ஓர் பொருக்கும் காட்ட நேர்ந்திடாக் கடையரில் கடையேன் 😟
ஆகம் ஆதி சொல் அறிவு அறிவேனோ அப்பனே எனை ஆண்டுகொண்டு அருளே. 🙏
#3
விழியைத் தூர்க்கின்ற வஞ்சரை விழைந்தேன் 😈 விருந்திலே உணவு அருந்தி ஓர் வயிற்றுக்
குழியைத் தூர்க்கின்ற கொடியரில் கொடியேன் 😠 கோப வெய்யனேன் பாபமே பயின்றேன் 😡
வழியைத் தூர்ப்பவர்க்கு உளவு உரைத்திடுவேன் 🗣️ மாயமே புரி பேயரில் பெரியேன் 👻
பழியைத் தூர்ப்பதற்கு என் செயக் கடவேன் பரமனே எனைப் பரிந்துகொண்டு அருளே. 🙏
#4
மதத்திலே அபிமானம் கொண்டு உழல்வேன் 😤 வாட்டமே செயும் கூட்டத்தில் பயில்வேன் 😩
இதத்திலே ஒரு வார்த்தையும் புகலேன் 🤐 ஈயும் மொய்த்திடற்கு இசைவுறாது உண்பேன் 🍯
குதத்திலே இழி மலத்தினும் கடையேன் 💩 கோடை வெய்யலின் கொடுமையில் கொடியேன் ☀️
சிதத்திலே உறற்கு என் செயக் கடவேன் தெய்வமே எனைச் சேர்த்துக்கொண்டு அருளே. 🙏
#5
கொடிய வெம் புலிக் குணத்தினேன் 🐅 உதவாக் கூவம் நேர்ந்துளேன் பாவமே பயின்றேன் 👿
கடிய நெஞ்சினேன் 💔 குங்குமம் சுமந்த கழுதையேன் 🐴 அவப் பொழுதையே கழிப்பேன் 😴
விடியும் முன்னரே எழுந்திடாது உறங்கும் வேடனேன் 🛌 முழு_மூடரில் பெரியேன் 🤯
அடியன் ஆவதற்கு என் செயக் கடவேன் அப்பனே எனை ஆண்டுகொண்டு அருளே. 🙏
#6
தூங்குகின்றதே சுகம் என அறிந்தேன் 😴 சோறு-அதே பெறும் பேறு-அது என்று உணர்ந்தேன் 🍚
ஏங்குகின்றதே தொழில் எனப் பிடித்தேன் 😔 இரக்கின்றோர்களே என்னினும் அவர்-பால்
வாங்குகின்றதே பொருள் என வலித்தேன் 💰 வஞ்ச நெஞ்சினால் பஞ்சு எனப் பறந்தேன் 💨
ஓங்குகின்றதற்கு என் செயக் கடவேன் உடையவா எனை உவந்துகொண்டு அருளே. 🙏
#7
வருத்த நேர் பெரும் பாரமே சுமந்து 😫 வாடும் ஓர் பொதி_மாடு என உழன்றேன் 🐃
பருத்த ஊனொடு மலம் உணத் திரியும் பன்றி போன்று_உளேன் 🐷 நன்றி ஒன்று அறியேன் 😒
கருத்து இலாது அயல் குரைத்து அலுப்படைந்த கடைய நாயினில் கடையனேன் 🐕🦺 அருட்குப்
பொருத்தன் ஆவதற்கு என் செயக் கடவேன் புண்ணியா எனைப் புரிந்துகொண்டு அருளே. 🙏
#8
துருக்கலோ கொடும் கருங்கலோ வயிரச் சூழ் கலோ எனக் காழ்கொளும் மனத்தேன் 💎
தருக்கல் ஆணவக் கருக்கலோடு உழல்வேன் 😠 சந்தை நாய் எனப் பந்தமுற்று அலைவேன் 🐶
திருக்கு எலாம் பெறு வெருக்கு எனப் புகுவேன் 🐈⬛ தீயனேன் பெரும் பேயனேன் 😈 உளம்-தான்
உருக்கல் ஆகுதற்கு என் செயக் கடவேன் உடையவா எனை உவந்துகொண்டு அருளே. 🙏
#9
கானமே உழல் விலங்கினில் கடையேன் 🌳 காமம் ஆதிகள் களைகணில் பிடித்தேன் 🔥
மானம் மேலிடச் சாதியே மதமே 🛐 வாழ்க்கையே என வாரிக்கொண்டு அலைந்தேன் 🌊
ஈனமே பொருள் எனக்கு அளித்து இருந்தேன் 💸 இரக்கம் என்பதோர் எள்துணை அறியேன் 💔
ஞானம் மேவுதற்கு என் செயக் கடவேன் நாயகா எனை நயந்துகொண்டு அருளே. 🙏
#10
இருளையே ஒளி என மதித்து இருந்தேன் 🌑 இச்சையே பெரு விச்சை என்று அலந்தேன் 💫
மருளையே தரும் மன_குரங்கோடும் 🐒 வனம் எலாம் சுழன்று இனம் எனத் திரிந்தேன் 🌲
பொருளை நாடும் நல் புந்திசெய்து அறியேன் 🧠 பொதுவிலே நடம் புரிகின்றோய் உன்றன்
அருளை மேவுதற்கு என் செயக் கடவேன் அப்பனே எனை ஆண்டுகொண்டு அருளே. 🙏
⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜