MAYA!

மாயை = பொய்.
மாயை என்பது உண்மை போன்று உள்ள ஒரு பொய்.
மாயையின் கூறு மனமாகும்.
மனம் பொய்மையையே (மாயை) அதிதீவிரமாக பற்றும்.
மாயை மறைக்கும் இயல்புடையது.
ஒன்றை இன்னொன்றாக காட்டும் தன்மையுடையது.(திரிபுக்காட்சி)
மாயை நம் அறிவினில் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும்.
எப்பொருளினும் உண்மைச் சொரூபத்தை மறைக்கும் தன்மைக் கொண்டது.
அதிகம் சிந்திக்க செய்து வினையில் சிக்கச் செய்வதே மாயையின் முக்கிய வேலை.
மேலும் அதிகம் சிந்திக்க செய்து, செய்ய வேண்டிய முக்கியமான வேலையை மறக்கடிக்கச் செய்வதும் மாயை தான். (பெரும்பாலும் நாம் நல்வழியில் ஒழுக ஆரம்பிக்கும் போது இவ்வாறு நடக்கும்)
ஒன்றுமே இல்லாததை ஆச்சரியப்படுத்தி காட்டுவதும்!! ஆச்சரியமான ஒன்றை ஒன்றுமே இல்லாதது போல் காட்டுவதும் மாயையின் தனிச்சிறப்பு ஆகும்!
மாயை வகைகள் : சுத்த மாயை→அசுத்த மாயை→பிரகிருதி மாயை
உபாயம் (Solution):
மாயை இடையறாது செயலாற்றுகிறது (with the help of மனம்) In order to overcome this Maya we need consistent protection like நாமஜெபம், Witness Consciousness, அருளாளர்களின் பாடல்கள், இறையருள்
முந்துறும் அறிவு மாயையோடு சேர்ந்த அறிவாகும்! எனவே ஒவ்வொரு விடத்தையும் கண்மூடிக்கொண்டு Prejudice mindset_யில் காணாமல், ஒவ்வொரு விடத்தையும் கண்டு, உற்று, உணர்ந்து நிகழ்காலத்தில் இருந்து பொறுமையாக அணுகுதலே தகும்!
”இது எது என காட்டாது; அது இது எனக் காட்டுவதே மாயை”
மேலும் மாயை பற்றி அறிய இந்த காணொளியை காண்க : https://youtu.be/3v2qnPliGnU
⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜






