Seven Types of Obscuration
கறுப்புத்திரை – அசுத்த மாயாசத்தி :
- கரைவின் மாமாயைக் கரும்பெரும் திரையால் அரைசது மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி
நீலத்திரை – சுத்தாசுத்த மாயாசத்தி :
- பேருறு நீலப்பெருந்திரை அதனால் ஆருயிர் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி
பச்சைத்திரை – கிரியாசத்தி :
- பச்சைத்திரையால் பரவெளி அதனை அச்சுற மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி
சிவப்புத்திரை – பராசத்தி :
- செம்மைத் திரையால் சித்துறு வெளியை அம்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி
பொன்மைத்திரை – இச்சாசத்தி :
- பொன்மைத்திரையால் பொருளுறு வெளியை அன்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி
வெண்மைத்திரை – ஞானசத்தி :
- வெண்மைத்திரையால் மெய்ப்பதி வெளியை அண்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி
கலப்புத்திரை – ஆதிசத்தி :
- கலப்புத்திரையால் கருது அனுபவங்களை அலப்புற மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி
” அறிவினில் உள்ள ஆணவத்தின் அடர்த்திக் கெடுதலின் போது ஏற்படும் மாற்றத்தின் படிநிலையே எழுவகை திரை வண்ணங்கள் “
⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜