அன்புடையீர்! வம்மின் இங்கே!❤

Types of Mother!

நம்மை வளர்க்கும் அம்மைகள் யார்..?

 • நம்ம எல்லாருக்கும் 4 விதமான தாய்கள் இருக்காங்க என்பதை நாம் மறந்துவிடக்கூடாது!
 • இறைவன் ஜீவான்மாக்களை நேர வளர்ப்பது இல்லை; அவர் தனது அருட்சக்தி (கருணை) மூலமே ஜீவான்மாக்களை கடைத்தேற்றுகிறார்!

 • சான்று :

  திருவருட்பா பாடல் எண் : 3546 | மாயையின் விளக்கம்

 • அத்த (அப்பா) நீ எனைஓர் தாய் (BigMother)
  கையில் கொடுத்தாய்!

  ஆங்கவள் மகள் (MotherX) கையில் கொடுத்தாள்!
  நித்திய மகள் ஓர் நீலி(MotherY)பாற் கொடுத்தாள்!
  நீலியோ தன்புடை ஆடும்
  தத்துவ மடவார் தங்கை(MotherZ)யில் கொடுத்தாள்!
  தனித்தனி அவர்அவர் எடுத்தே
  கத்த வெம் பயமே காட்டினர் நானும்
  கலங்கினேன், கலங்கிடல் அழகோ?

பிரகிருதி அம்மை : (MOTHER Z)

 • இவங்க கிட்ட தான் நாம் எல்லாரும் சிறுவயது தொட்டு, வயதுக்கு வரும் வரை வளர்கிறோம்
 • ரொம்ப பாசங்கார அம்மா (sarcastically) எந்த அளவுக்கு என்றால் நாம அருளியல் வளர்ச்சி கூட அடையவிடாம, கடைசி வரைக்கு அவங்க கைக்குள்ளையே வச்சி விரும்பும் அம்மை
 • (இது ஒரு தவறான வளர்ப்பு ஆகும்)
 • இவங்க மாயை அசுத்த மாயைக்கும் கீழான பிரகிருதி மாயை ஆகும்
 • உலகியல் பாசத்தோடு நம்மை பின்னி பிணைவாங்க இவங்க கூட தான் நாம அதிகம் பழகு ரோமா அப்படின்றது எப்படி தெரிஞ்சிக்கிறது என்றால் அதிகம் சோர்வும், தாமச குணமும் நமக்கு வந்தால் நாம இவங்க கூட தான் அதிகம் பழகுறோம் என்று அர்த்தம்

திரோதாயி அம்மை : (MOTHER Y)

 • இவங்க கிட்ட தான் நாம் வயசுக்கு வந்த நாள் தொடங்கி – வயது மூப்பாகி உட்கார வரைக்கும் வாழுறோம்!
 • இவங்க குணம் நலம் எப்படிப்பட்டது என்றால் ஆசைக்காட்டி மோசம் பண்ணக்கூடியவங்க இவங்க
 • இங்க ஆன்மீகத்துல நுழைய அனுமதி கொடுப்பாங்க ஆனா எடுத்த உடனேயே உண்மை எதுனு தெரியவொட்டாம மறைப்பாங்க
 • மறைப்பு தான் இவங்க பிரதானத் தொழில்; இவங்க மாயை – அசுத்த மாயை ஆகும்! 
 • உலகியலில் நம்மை ஓட விடுவாங்க!
 • இவங்க கூட தான் நாம அதிகம் பழகுரோமா அப்படின்றது எப்படி தெரிஞ்சிக்கிறது என்றால் வாழ்க்கையில ஞானச்செறுக்கு, இன்பம் – துன்பம், மகிழ்ச்சி – சோர்வு, விருப்பு – வெறுப்புனு, 
  மாறி மாறி அடிவாங்குவோம்! ரஜோகுணம் மேலோங்கி இருக்கும்!

திரு அருட்சக்தி அம்மை : (MOTHER X)

 • இவங்கதான் நம்ம உண்மையான அம்மை ஏனா இவங்க தான் நம்ம ஆன்மா (சிற்சபை)
 • ஆம்! எல்லா ஆன்மாக்களும் பெண் தான்! அதைப்பற்றி விவரமாக இந்த காணொளியில் விளக்கி உள்ளோம் பிறகு காணவும்! (Video Link)
 • இவங்க குணம் நலம் எப்படிப்பட்டது என்றால் அமைதி, சத்துவம், அன்பு, மெளனம்
 • இவங்க அருள் கிடைச்சாதான் உண்மையான அருளியில் வளர்ச்சியிலே கிடைக்கும்!
 • என்றும் பசிக்காத அமுதம் (உண்மையான தாய்ப்பால்) இவங்க கிட்ட இருந்து தான் கிடைக்கும்!
 • உண்மையான அம்மையாக நாம் கருத வேண்டியது இந்த அம்மையைத் தான்!
 • அருட்சக்தியின் (ஆன்மா) துணையோடு தான் நாம் ஆண்டவரை அடைய முடியும்!
 • இவங்க மாயை சுத்த மாயை ஆகும்; மயக்கம் அவ்ளோவா இருக்காது! சாதாரணமாக கடக்கக்கூடிய அளவுள தான் இருக்கும்!

மேலும் அறிய :

 • பின் குறிப்பு : இந்த பதிவை நாம் பதிவேற்றுவதற்கான காரணம் சக்தி தெய்வ வழிபாடு(குறிப்பாக இந்த ஆடிமாத கூத்து) ஊக்கப்படுத்துவதற்காக அல்ல!
  நீயே ஒரு அருட்சக்தியின் வடிவம் தான் என்பதை மறந்துவிடக்கூடாது என்பதற்காக தான்!!

⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜