அன்புடையீர்! வம்மின் இங்கே!❤

#NNA_NET_LOGO

திருவருட்பா: உலப்பில் இன்பம் (பாடல்கள்: 4706 – 4715)


#4706
கருணாநிதியே!🙏 அடியேன் இரு கண் உளானே!👀
தெருள் நாடும் என் சிந்தையுள் மேவிய தேவ தேவே!!🌟
பொருள் நாடிய, சிற்றம்பலத்து ஒளிர் புண்ணியா!!✨
மெய்த் தருணா! ⏳
இது தான் தருணம் எனைத் தாங்கிக்கொள்ளே!!🙌

#4707
கூகா எனக் கூடி எடாது இக்கொடியனேற்கே😟
சாகா வரம் தந்த தயாநிதித் தந்தையே!!😇
நின் மாகாதலன் ஆகினன் நான் இங்கு
வாழ்கின்றேன்💖
என் யோகாதிசயங்கள் உரைக்க உலப்புறாதே!!♾️

#4708
எந்தாய் உனைக் கண்டு களித்தனன் ஈண்டு இப்போதே!!😃
சிந்தா நலமும், பலமும் பெற்றுத் தேக்குகின்றேன்!!🧠💪
அந்தாமரையான்🌸, நெடுமாலவன்🧿,
ஆதி வானோர்👼🏻🧚‍♀️
வந்தார்; எனை வாழ்த்துகின்றார் “இங்கு வாழ்க” என்றே.🙏

#4709
வாழ்வேன்! அருள் ஆர் அமுது உண்டு 🍯
இங்கு வாழ்கின்றேன்!!😌
நான் ஏழ் வேதனையும் தவிர்ந்தேன்!!😌💨
உனையே அடைந்தேன்!!🤝
சூழ்வேன்! திருச்சிற்றம்பலத்தைத் துதித்து
வாழ்த்தித்🙌 தாழ்வேன் அலது;

யார்க்கும் இனிச் சற்றும் தாழ்ந்திடேனே!!🙅

#4710
தாழாது எனை ஆட்கொண்டு அருளிய தந்தையே!!🤴
நின் கேழ் ஆர் மணி அம்பலம் போற்றக் கிடைத்துளேன் 💎
நான் ஏழா நிலை மேல் நிலை ஏறி இலங்குகின்றேன்!!🌟
ஊழால் வந்த துன்பங்கள் யாவும் ஒழிந்தது அன்றே!!💨

#4711
கோடா மறை ஆகமம் ஆதிய கூறுகின்ற📜
சூடாமணியே!!👑 மணியுள் ஒளிர் ஜோதியே!!✨ என்
பாடு ஆனவை தீர்த்து அருள் ஈந்து நின் பாதம் 🙏
என்னும் வாடா மலர் என் முடி சூட்டினை வாழி நீயே!!🌺

#4712
எல்லாம் செய வல்லவனே!!💪 எனை ஈன்ற தாயின் நல்லாய்!!👩‍👧‍👦
சிவ ஞானிகள் பெற்ற மெய்ஞ்ஞான வாழ்வே!!🧠✨
கொல்லா நெறி காட்டி என்றன்னைக் குறிப்பில்
கொண்டு என் 🕊️
பொல்லாமை பொறுத்தனை; வாழ்க நின்
பொற்பதமே!!👣💖

#4713
பரமான சிதம்பர ஞான சபாபதியே!!🏛️
வரமான எல்லாம் எனக்கு ஈந்த நல் வள்ளலே!!🎁
என் தரமானது சற்றும் குறித்திலை சாமி!🤔
நின்னை உரமான உள் அன்பர்கள்🫂
ஏசுவர் உண்மை ஈதே!!🗣️

#4714
தாயே எனைத் தந்த தயாநிதித் தந்தையே!!🤱
இந்நாயேன் பிழை யாவையும்
கொண்டனை நன்மை என்றே!!😇
காயே கனியாகக் கருதும் கருத்தனே நின் 🌱
சேயே என என் பெயர் எங்கும் சிறந்தது அன்றே!!🌟

#4715
பொய்யே உரைக்கின்ற என் சொல்லும் புனைந்துகொண்டாய்!!😍
மெய்யே திருஅம்பலத்து ஆடல் செய் வித்தகனே!!🕺
எய்யேன்! 🎯 இனி வெம் மலக் கூட்டில் இருந்து,
என் உள்ளம் நையேன்!!💔
சுத்த நல் உடம்பு எய்தினன் நான் நிலத்தே!!🚶‍♂️🧚‍♀️

⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜