
#3720
மாழை மாமணிப் பொதுநடம் புரிகின்ற வள்ளலே! 💖
அளிகின்ற வாழை வான் பழச்சுவை🍌 எனப் பத்தர் தம் 🥭
மனத்துளே தித்திப்போய் 😋
ஏழை நாயினேன்🐕 விண்ணப்பம் திருச்செவிக்கு 👂
ஏற்று அருள் செயல் வேண்டும்! 🙏
கோழை மானிடப் பிறப்பு இதில் உன் அருள் குரு🧓🏻 உருக்கொளுமாறே! ✨
#3721
பொன்னின் மாமணிப் பொதுநடம் புரிகின்ற புண்ணியா! ✨
கனிந்து ஓங்கி மன்னு வாழையின் பழச்சுவை🍌 எனப்பத்தர் 🥭
மனத்துளே தித்திப்போய்! 😋
சின்ன நாயினேன்🐶 விண்ணப்பம் திருச்செவி👂 சேர்த்து அருள் செயல் வேண்டும்! 🙏இன்ன என் உடைத் தேகம் நல் ஒளி பெறும் இயல் உருக்கொளுமாறே! 🌟
#3722
விஞ்சு பொன்அணி அம்பலத்து அருள் நடம் விளைத்து உயிர்க்குயிர் ஆகி 💫
எஞ்சுறாத பேரின்ப அருள்கின்ற என் இறைவ நின் அருள் இன்றி 💖
அஞ்சும் நாயினேன்🐩 விண்ணப்பம் திருச்செவி 👂
அமைத்து அருள் செயல் வேண்டும்! 🙏
துஞ்சும்💤 இவ்வுடல் இம்மையே துஞ்சிடாச் சுக உடல் கொளுமாறே! 😇
#3723
ஓங்கு பொன் அணி அம்பலத்து அருள் நடம் உயிர்க்கு எலாம் ஒளி வண்ணப் ✨
பாங்கு மேவ நின்று ஆடல் செய் இறைவ நின் பதமலர் பணிந்து ஏத்தாத் 👣
தீங்கு நாயினேன் விண்ணப்பம் திருச்செவி🧏🏻 சேர்த்து அருள் செயல் வேண்டும்! 🙏
ஈங்கு🔻 வீழ்📉 உடல் இம்மையே வீழ்ந்திடா இயலுடல் உறுமாறே! 💫
#3724
இலங்கு பொன் அணிப் பொதுநடம் புரிகின்ற இறைவ! 🌟
இவ்வுலகு எல்லாம் துலங்கும் வண்ணம் நின்று அருளு 🌍
நின் திருவடித் துணை துணை என்னாமல்; கலங்கு 😖
நாயினேன்🐶விண்ணப்பம் திருச்செவி👂 கலந்து 👂
அருள் செயல் வேண்டும்!
அலங்கும்😵 இவ்வுடல் இம்மையே
அழிவுறா ✨அருள் உடல் உறுமாறே! 💫
#3725
சிறந்த பொன் அணித் திருச்சிற்றம் பலத்திலே திருநடம் புரிகின்ற ✨
அறம் தவாத சேவடி மலர் முடிமிசை அணிந்து அகம் மகிழ்ந்து🙏 ஏத்த
மறந்த நாயினேன்🐕 விண்ணப்பம் திருச்செவி👂 மடுத்து அருள் செயல் வேண்டும் 🙏
பிறந்த இவ்வுடல் இம்மையே அழிவுறாப் பெரு நலம் பெறுமாறே! 💖
#3726
விளங்கு பொன் அணிப் பொதுநடம் புரிகின்ற 🌟
விரைமலர்த் திருத்தாளை உளம்கொள் அன்பர் தம் 💖
உளம்கொளும் இறைவ நின் ஒப்பு இலாப் பெருந்தன்மை ✨
களம் கொள் நாயினேன்🐕🦺 விண்ணப்பம் திருச்செவி 👂
கலந்து அருள் செயல் வேண்டும்! 🙏
துளங்கும் இவ்வுடல் இம்மையே அழிவுறாத் தொல் உடல் உறுமாறே! 💫
#3727
வாய்ந்த பொன் அணிப் பொதுநடம் புரிகின்ற வள்ளலே 💖
மறை எல்லாம் ஆய்ந்தும் இன்ன என்று அறிந்திலா! 📚
நின் திரு அடிமலர் பணியாமல் சாய்ந்த நாயினேன்🐕🦺
விண்ணப்பம் திருச்செவி👂 தரித்து அருள் செயல் வேண்டும்! 🙏
ஏய்ந்த இவ்வுடல் இம்மையே திருவருள் இயல் உடல் உறுமாறே! 💫
#3728
மாற்று இலாத பொன் அம்பலத்து அருள் நடம் வயங்க நின்று ஒளிர்கின்ற ✨
பேற்றில் ஆர் உயிர்க்கு இன்பு அருள் இறைவ நின் பெய் கழற்கு அணி மாலை 💖
சாற்றிடாத என் விண்ணப்பம் திருச்செவி👂 தரித்து அருள் செயல் வேண்டும் 🙏
காற்றில் ஆகிய இவ்வுடல் இம்மையே கதி உடல் உறுமாறே! 🌬️
#3729
தீட்டு பொன் அணி அம்பலத்து அருள் நடம் செய்து உயிர்த் திரட்கு இன்பம் ✨
காட்டுகின்றதோர் கருணை அம் கடவுள் நின் கழல் இணை கருதாதே! 💖
நீட்டுகின்ற என் விண்ணப்பம் திருச்செவி👂 நேர்ந்து அருள் செயல் வேண்டும்! 🙏
வாட்டும் இவ்வுடல் இம்மையே அழிவுறா வளம் அடைந்திடுமாறே!🐶🐕🐕🦺
⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜