அன்புடையீர்! வம்மின் இங்கே!❤

யார் இந்த நான் ஞானி அல்ல?

உங்கள் நம்பன்

வாழ்க்கையில் பிரச்சினை என்பது வந்துகிட்டே இருக்கு!

ஒரு பிரச்சினைக்கு முழுதீர்வு கண்டுபிடிக்குறதுக்குள்ள அடுத்து இரண்டாவது ஒரு பிரச்சினை வந்து நிக்குது!!

சரி முதல் பிரச்சினைக்கான காரணம் என்னடாபானு பார்க்கப்போன அதலாம் ஏன் பார்க்குற இருக்குற பிரச்சினை மட்டும் பாரு அப்படினு சொல்றாங்க?

சரி இந்த பிரச்சினைக்காவது அடிக்காரணம் கண்டுபிடிக்கப்போனா இந்தா அடுத்த பிரச்சினை வந்துச்சுப்பாரு! இத மட்டும் பாரு சொல்டேன்!

அப்டினு பிரச்சினைக்கு முழுத்தீர்வப் பார்க்காம வெறும் ஓடி மறையுற இந்த அவசர சமூகத்துல எல்லா பிரச்சினைக்கும் தீர்வு உண்டானா…? உண்டு!!

ஏன் மரணத்துக்குக் கூட தீர்வு உண்டு! ஆனா அதையெல்லாம் ஏத்துக்குக்காம பிரச்சினை நிலையானது கஷ்டம் தான் வாழ்க்கையானது_னு சொல்ற இந்த சமூகத்த என்னால ஏத்துக்குக்க முடியாதுனு சொன்னா நீ ஏன் ஞானி மாதிரி பேசுற அப்படினு சொல்லி என்னை ஒதுக்கிவைக்குறாங்க!!

அட! நான் ஞானிலா இல்லீங்க நானும் உங்கள மாதிரி சாதாரண மனிதன் தான்! அப்டினு அவங்களோட Sync ஆனாலும்! எனக்கு இந்த சமூகத்து மேலையும், வாழ்க்கையின் மீதும் ஒரு தனிப்பார்வை உண்டு! அத பதிவு பண்ண தான் இந்த முயற்சி!
உண்மையிலேயே நான் ஞானிலா அல்ல ஆனா  எல்லாத்தையும் கொஞ்சம் Deep_ah analyze பண்ணிப்பாக்குற சின்ன பையன்!😁 Small Boy! 😅