அன்புடையீர்! வம்மின் இங்கே!❤

#NNA_NET_LOGO


தயவு

#NNA குழுவிற்கு அன்புடன் வரவேற்கிறோம்!

இந்தக் குழுவில் இணையும் அனைவரும் பின்வரும் விதிமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்🙏

செய்ய வேண்டியவை (Do’s):

🤝 தயவான உரை: நாம் அனைவரும் சகோதர ஆன்மாக்கள் என்ற புரிதலில் தயவாகவும் ❤️ பணிவாகவும் குழுவில் Text செய்யுங்கள்🙏.

நேர்மறையான பகிர்வு: ஆன்மீக வளர்ச்சிக்கு உதவும் நல்ல அருளாளர் சிந்தனைகள் 💡, ஞானக் குறிப்புகள் 🧘‍♀️ மற்றும் உத்வேகம் தரும் பதிவுகளை 📜 மட்டும் பகிருங்கள்.

🗣️ செயல்பாட்டில் பங்கேற்கவும்:
விசார உரையாடல்களில் சிந்தனையுடன் பங்கேற்கவும்—கவனமாக படியுங்கள் 📖,
திறந்த மனதுடன் பதிலளியுங்கள் 💬

🎯 தலைப்பில் இருங்கள்: ஆன்மீகம், மனநிறைவு 🧠, தனிப்பட்ட வளர்ச்சி 🌱, குணப்படுத்துதல் ❤️‍🩹, தியானம் 🧘‍♂️ அல்லது தொடர்புடைய தலைப்புகளில் கவனம் செலுத்துங்கள். உங்கள் பதிவுகளை சரியான தலைப்பு/பிரிவில் போடுங்கள் 📂.

✍️ தெளிவாகவும் சுருக்கமாகவும் செய்தி அனுப்புங்கள்:
உங்கள் கருத்துகளை
கனிவாகவும், சுருக்கமாகவும் தெரிவியுங்கள் 📝. மிக நீண்ட செய்திகளைத் தவிர்க்கவும்! ❌ ஒருவேளை பகிர வேண்டிய அவசியம் இருந்தால், நிர்வாகியிடம் தெரிவியுங்கள்; நாங்கள் சுருக்கித் தருகிறோம்! 📃

🛡️ பாதுகாப்பு: குழுவில் உள்ள நபர்கள் மூலம் ஏதேனும் சிக்கல் அல்லது புகார் இருந்தால் 📝, #NNA Botயிடம்🤖  தனிப்பட்ட முறையில் தெரிவியுங்கள்!

செய்யக்கூடாதவை (Don’ts – மிக முக்கியம்):

🔐 தனிப்பட்ட விவரங்கள் பகிர வேண்டாம்:
யாரும் தங்களுடைய தனிப்பட்ட விவரங்கள் (Phone Number 📱, Photo 📸) மற்றும் தரவுகளைக் குழுவிலும், தனிப்பட்ட உரையாடலிலும் (DM) பகிர வேண்டாம் 🚫. உங்கள் பாதுகாப்பிற்கு நீங்களே பொறுப்பு 🛡️.

💰 வணிகம் & நிதி திரட்டல் கூடாது: இங்கு எந்தவிதமான பொருட்களையும் (மூலிகை 🌿, மருந்துகள் 💊 போன்றவை) விற்கவோ அல்லது விளம்பரப்படுத்தவோ அனுமதியில்லை ❌. அதேபோல், பொது நோக்கம் என்ற பெயரில் பணம் அனுப்பகோருதல் கூடாது! 💸

📵 அனுமதியின்றி தனிப்பட்ட செய்தி கூடாது: தனியுரிமையை மதியுங்கள்—அனுமதியின்றி உறுப்பினர்களுக்கு DM 📩 அனுப்பக்கூடாது!

🔗 வெளி இணைப்புகள்: நிர்வாகியின் அனுமதியின்றி வேறு வாட்ஸ்அப்/டெலிகிராம் குழுக்களின் இணைப்புகள் 🌐 அல்லது விளம்பரங்களை 📢 பகிரக்கூடாது. அப்படி பகிர்ந்தால் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்! உடனடியாக அவர்கள் நீக்கப்படுவார்கள்!

⚔️ கருத்து மோதல் & வாக்குவாதம் கூடாது: குழுவில் மற்றவர்களுடன் வீண் வாக்குவாதங்கள் செய்வதோ (Arguments), கடுமையான கருத்து மோதல்களில் ஈடுபடுவதோ கூடாது 🔇. மாற்று கருத்துக்களை அமைதியாக கடந்து செல்லுங்கள் ☮️.

📵 தேவையற்ற பதிவுகள்: ஆன்மீகம் சாராத செய்திகள் 📰, காலை வணக்கப் படங்கள் (Good Morning forwards ☕) ஆகியவற்றைத் தவிர்க்கவும்.

📢 வெளி நோக்கங்கள்/ஆட்சேர்ப்பு கூடாது:பொதுநோக்குடன் செயல்படுகிறோம்” 🤝 என்று கூறியோ அல்லது வேறு  நோக்கத்திற்காகவும் உறுப்பினர்களை வேறு வெளி குழுக்கள், சேனல்கள் அல்லது சமூகங்களில் சேர ஊக்குவிக்கவோ, அழைக்கவோ அல்லது வழிநடத்தவோ கூடாது 🚷.

🔞 தவறான உள்ளடக்கம்: வன்முறை 👊, வெறுப்புப் பேச்சு 🤬 அல்லது ஆபாசமான உள்ளடக்கங்களைப் பகிர்ந்தால் உடனடியாக நீக்கப்படுவீர்கள் 🚷.

🔀 திசைதிருப்பவோ/குழப்பவோ கூடாது: உறுப்பினர்களை தங்கள் தேர்ந்தெடுத்த பாதையிலிருந்து திசைதிருப்பவோ, குழப்பவோ 😵‍💫, தவறாக வழிநடத்தவோ கூடாது!

🚫 வேறு குழுவில் சேராதீர்கள் : தனிப்பட்ட DM மூலம் வேறு குழு 📢 அல்லது சேனலில் சேரும்படி அழைப்போ அல்லது லிங்க் 🔗 வந்தால் அதனை ஏற்காதீர்கள் ❌. அப்படி யாரேனும் உங்களுக்கு லிங்க் அனுப்பி நீங்கள் அதில் இணைந்தால், அதற்கு குழு நிர்வாகம் எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது 🤷‍♂️.

📨 அதிகப்படியான செய்திகள் கூடாது:
தொடர்ச்சியாக ஒரே
பதிவுகள், ஸ்டிக்கர்கள் மட்டும் அல்லது தொடர்பில்லாத ஃபார்வர்டுகளால் சாட்டை நிரப்பக்கூடாது 📉.

⚠️ முக்கிய குறிப்பு: விதிமுறைகளை மீறுபவர்கள் முன்னறிவிப்பின்றி குழுவிலிருந்து நீக்கப்படுவார்கள் (Remove/Ban 🚫). யாரேனும் உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் தொல்லை கொடுத்தால், ஸ்க்ரீன்ஷாட் (Screenshot 📱) எடுத்து Admin Souls_க்கு அனுப்பவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்!

🌟 குழுவின் நோக்கம்: இறைவனிடத்தில் அன்பாகவும் ❤️, ஜீவர்களிடத்தில் தயவாகவும் 🦌  நன்முயற்சியில் பழகியும், மரணமில்லா பெருவாழ்வை 🌌 நோக்கி ஆன்ம நேய சகோதர உணர்வில் மகிழ்ச்சியாக 😊 பயணிப்பது ஆகும்.

#BeNNA #StayNNA