Types of Salvations
முக்தி வகைகள் :
-
சாலோக்கிய முக்தி :
கடவுளர் உலகத்தை அடைந்து தொண்டு செய்தல். -
சாமீப்பிய முக்தி :
கடவுளர் உலகத்தை அடைவதோடு அல்லாமல், அருகாமையில் இருந்து தொண்டாற்றும் பேறு. -
சாரூப்பிய முக்தி :
உபாசிக்கும் கடவுள் வடிவத்தின் திருவுருவத்தையும் இறைச் சின்னங்களையும் பெற்று, இறைவனுக்கு தொண்டு செய்தல். (சில உதாரணங்கள்: திரிசூலம், சங்கு, சக்கரம், சக்தி வேல், நெற்றிக் கண்கள்). -
சாயுச்சிய முக்தி :
கடவுளரோடு ஒன்று படுதல்.
வேதாந்த முக்தி வகைகள் :
-
ஜீவ முக்தி :
ஜீவ முக்தி அல்லது சீவ முக்தி என்பது கர்ம யோகம்,
பக்தி யோகம் ஆகியவற்றில் தேர்ந்தபின் ஞான யோக வாழ்வில் மனம் எதிலும் சமத்துவநிலை அடைந்து, உயிருடன் இருக்கும் போதே மனநிறைவுடன் வாழ்வதே சீவ முக்தி எனும் பெரு நிலையை அடைதல் ஆகும். அத்தகைய பெருநிலையை அடைந்தவரை சீவ முக்தன் என்பர். சீவ முக்தர்கள் உடலை துறந்தபின் அடைவதே விதேகமுக்தி ஆகும். -
விதேக முக்தி :
விதேக முக்தி என்பது ஞான யோகத்தின் மூலம் முக்குணங்களை கடந்த ஜீவன் முக்தன், ஆத்மஞானத்தில் நிலைபெற்று பிரம்மத்தில் ஐக்கியமாகி விடுவதே விதேக முக்தி ஆகும். இந்த விதேக முக்தி அடைந்த ஒருவருக்கு (இறந்த பின்பு) மறுபிறவி கிடையாது. அத்தகைய மறுபிறவி அற்ற நிலையை அடைந்தவர்களை விதேக முக்தன் என்பர்.
-
கிரம முக்தி :
கிரம முக்தி எனில் ஒருவன் இந்த பிறவியில் முழு பிரம்ம ஞானத்தை அடைய இயலாவிட்டாலும், தான் செய்த புண்ணியம் காரணமாக பிரம்மலோகத்தை அடைந்து, அங்கு முழு பிரம்ம ஞானம் அடைந்து முக்தி பெறுகிறான். இவ்வாறு கிரம முக்தி பெற்றவன் மறுபிறவி எடுப்பதில்லை. எதை அடைந்தால் மறுபிறவி இல்லையோ, அதுவே பிரம்மத்தின் இருப்பிடம்.
⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜