
Telegram Class : 06/07/2025
#3730
உரத்த வான்☁️ அகத்தே உரத்தவா!
ஞான ஒளியினால் ஓங்கும் ஓர் சித்தி ✨
புரத்தவா! பெரியோர் புரத்தவா!
குற்றம் பொறுத்து, அடியேன்
தனக்கு அளித்த வரத்தவா!✨
உண்மை வரத்தவா! ஆகமங்களும்📖,
மறைகளும் காணாத் தரத்தவா!
அறிவு ஆதரத்தவா!🧠
பொதுவில் தனித்தவா!
இனித்த வாழ்வு அருளே!! 🙏
#3731
முன்னவ அதிபர்க்கு முன்னவா!
வேத முடி முடி மொழிகின்ற முதல்வா! 🥇
பின்னவ அதிபர்க்குப் பின்னவா!
எவர்க்கும் பெரியவா! பெரியவர் மதிக்கும்
சின்னவா! சிறந்த சின்னவா!
ஞான சிதம்பர வெளியிலே நடிக்கும்
மன்னவா! அமுதம் அன்னவா!
எல்லாம் வல்லவா!
நல்ல வாழ்வு அருளே! 🤲🏻
#3732
விடைய வாதனை தீர் விடையவா!💬
சுத்த வித்தை முன் சிவ வரை கடந்த நடையவா!
ஞான நடையவா!! இன்ப நடம் புரிந்து
உயிர்க்கு எலாம் உதவும் கொடையவா!!💰
ஓவாக் கொடையவா!!💸
எனை ஆட்கொண்டு எனுள் அமர்ந்து அருளிய
என் உடையவா! எல்லாம் உடையவா!!
உணர்ந்தோர்க்கு உரியவா!!🤝
பெரிய வாழ்வு அருளே!! 🤲🏻
#3733
வலத்தவா! நாத வலத்தவா!
ஜோதி மலையவா!🌋
மனம் முதல் கடந்த ⛰️ புலத்தவா!
எனது புலத்தவா தவிர்த்துப் பூரண
ஞான நோக்கு அளித்த 👀 நலத்தவா!!
வரையா நலத்தவா!!
மறைகள் நாடியும், காண்பதற்கு அரிதாம்
பலத்தவா!! திருஅம்பலத்தவா!!
எல்லாம் படைத்தவா!
படைத்த வாழ்வு அருளே!! 🤲🏻
#3734
உணர்ந்தவர் உளத்தை உகந்தவா!
இயற்கை உண்மையே!!
உரு அதாய் இன்பம்😊 புணர்ந்திட
எனை தான் புணர்ந்தவா!!
ஞானப் பொதுவிலே பொது நடம் புரிந்து
எண்குணம் திகழ்ந்து ஓங்கும் குணத்தவா!!
குணமும், குறிகளும், கோலமும், குலமும்
தணந்த சன்மார்க்கத் தனி நிலை
நிறுத்தும் தக்கவா!!
மிக்க வாழ்வு அருளே! 🤲🏻
#3735
தத்துவம் கடந்த தத்துவா!!
ஞான சமரச சுத்த சன்மார்க்கச்
சத்துவ நெறியில் நடத்தி என்றனை
மேல் தனி நிலை நிறுத்திய தலைவா 👑
சித்து வந்து ஆடும் சித்திமாபுரத்தில் திகழ்ந்தவா!
திகழ்ந்து எனது உளத்தே
ஒத்து நின்று ஓங்கும் உடையவா!!
கருணை உளத்தவா!!
வளத்த வாழ்வு அருளே! 🤲🏻
#3736
மதம் புகல் முடிபு கடந்த மெய்ஞ்ஞான
மன்றிலே வயம்கொள் நாடகம் செய் 🎭
பதம் புகல் அடியேற்கு அருட்பெருஞ்ஜோதிப்
பரிசு தந்திடுதும் என்று உளத்தே 🎁
நிதம் புகல் கருணை நெறியவா
இன்ப நிலையவா!!
நித்த நிற்குணமாம் சிதம் புகல் வேத
சிரத்தவா இனித்த தேனவா
ஞான வாழ்வு அருளே!🤲🏻
#3737
மூவிரு முடிபும்!
கடந்ததோர் இயற்கை முடிபிலே முடிந்து
எனது உடம்பும், ஆவியும் தனது மயம்
பெறக் கிடைத்த அருட்பெருஞ்ஜோதி அம்பலவா!! 🔥
ஓவுரு முதலா!! உரைக்கும் மெய் உருவும்
உணர்ச்சியும், ஒளி பெறு செயலும்,
மேவி நின்றவர்க்குள் மேவிய உணர்வுள்
மேயவா! தூய வாழ்வு அருளே!🤲🏻
#3738
பங்கம் ஓர் அணுவும் பற்றிடா
அறிவால் பற்றிய பெற்றியார்
உளத்தே தங்கும் ஓர் ஜோதித்🔥
தனிப்பெருங்கருணைத் தரம்
திகழ் சத்தியத் தலைவா!!
துங்கமுற்று அழியா நிலை தரும்
இயற்கைத் தொன்மையாம்
சுத்த சன்மார்க்கச் சங்கம்🛕 நின்று
ஏத்தும் சத்திய ஞான சபையவா
அபய வாழ்வு அருளே!🤲🏻 🛡️
#3739
இனித்த😋 செங்கரும்பில் எடுத்த தீம் சாற்றின்
இளம் பதப் பாகொடு தேனும் 🍯
கனித்த தீம் கனியின் இரதமும், கலந்து
கருத்து எலாம் களித்திட உண்ட 🥳
மனித்தரும் அமுத உணவுகொண்டு🍛
அருந்தும் வான நாட்டவர்களும்👼🏻 வியக்கத் 😲
தனித்த மெய்ஞ்ஞான அமுது எனக்கு
அளித்த தனியவா!!
இனிய வாழ்வு அருளே!!🤲🏻
⁜⁜⁜ FOLLOW US ⁜⁜⁜